விஜய் சேதுபதியுடன் 6-வது முறையாக இணைந்த நடிகை

பிறப்பு : - இறப்பு :

விஜய் சேதுபதி – காயத்ரி நடிப்பில் `புரியாத புதிர்’ படம் இன்று வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் நடிகை ஒருவர் விஜய் சேதுபதியுடன் 6-வது முறையாக இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

`ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் `அநீதிக்கதைகள்’.

விஜய் சேதுபதி – சமந்தா – பகத் பாஷில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை காயத்ரி ஷங்கர் ஒப்பந்தமாகி இருக்கிறார். அநீதிக்கதைகள் படத்தில் நடிப்பதன் மூலம் ஆறாவது முறையாக விஜய் சேதுபதியுடன், காயத்ரி இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன்னதாக விஜய் சேதுபதியுடன் இணைந்து `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, `ரம்மி’, `புரியாத புதிர்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதில் `புரியாத புதிர்’ இன்று ரிலீசாகி இருக்கிறது.

இதுதவிர விஜய் சேதுபதியுடன் இணைந்து `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, `சீதக்காதி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தியாகராஜன் குமாரராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வந்த இந்த படம் சில காரணங்களால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit