உடல் உள்ளுறுப்புகளை சுத்தமாக்கும் உணவுகள்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bo

உடலின் உள்ளுறுப்புகளை சுத்தமாக்கி அதன் செயல்பாட்டை சீராக்க உதவும் 5 வகையான உணவுகள் இதோ,

எலுமிச்சை

எலுமிச்சையில் விட்டமின் B, C, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மற்றும் பயோபிளாவனாய்டுகள் ஆகிய சத்துக்கள் உள்ளது.

எனவே குளிர்ந்த அல்லது சூடான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால், அது ரத்தம், கல்லீரல், சிறுநீரகத்தை சுத்திகரித்து, நம் உடலின் இயக்கத்தை சீராக்கிறது.

தேங்காய் தண்ணீர்

தேங்காய் நீரில் பொட்டாசியம், விட்டமின் B மற்றும் எலெக்ட்ரோலைட் ஆகியவை உள்ளது. இதை குடிப்பதால், அது ரத்த அழுத்தத்தை குறைத்து, தசைவலி, மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் இருந்து நரம்பு மண்டலம் பாதிக்காமல் தடுக்கிறது.

சியா விதைகள்

சியா விதைகளில் அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.

இந்த விதைகளை சாப்பிடுவதால், அது உடல், முடி, நகம், தசைகள், சிவப்பணுக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,

மேலும் இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை சம நிலையில் வைக்கவும் உதவுவதுடன், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோயை குணமாக்குகிறது.

தர்பூசணி

தர்பூசணியில் பொட்டாசியம், விட்டமின் A, C, B, ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், பீட்டா கரோடின், அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளது.

எனவே இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், அது மன அழுத்தத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாட்டை சீராக்க உதவுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit