வெள்ளைப்படுதல் நோய்க்கு அருகம்புல் சாறு

பிறப்பு : - இறப்பு :

ஆண், பெண் இருவருக்குமே அற்புத மருத்துவ மூலிகையாக அருகம்புல் திகழ்கின்றது.

வாதம், பித்தம், சளி ஆகிய நோய்கள், கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்தாக காணப்படுகிறது.

இதுமட்டுமின்றி குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க, நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.

அருகம்புல் சாற்றில் விட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது, இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது, குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்
  • அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு சேகரித்துச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதனை, ஒன்றிரண்டாக நறுக்கி, 4 டம்ளர் தண்ணீரில் இட்டு, சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து, 1 டம்ளராகக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து, இளஞ்சூடாக, தினம் இரண்டு வேளைகள் குடித்து வர வெள்ளைப்படுதல் நோய் தீரும்.
  • வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம், உடல் சூட்டையும் இது தணிக்கிறது.
  • கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும், வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
  • கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம் வெண்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாள்கள் வரை சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதி படும்.
  • நரம்புத் தளர்ச்சி, மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகளுக்கு அருகம்புல்சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
  • தேவையான அளவு அருகம்புல் சேகரித்துக் கொண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து, உடலில் தேய்க்க வேண்டும், ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர சொறி, சிரங்கு, புண்கள், படர்தாமரை, உடல் அரிப்பு குணமாகும்.
  • அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.
  • அருகம்புல் சாற்றை தினசரி 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் புத்தி மந்தம் விலகும், அறிவு துலங்கும், புத்தி தெளிவடைந்து பிரகாசம் அடையச் செய்யும்.
  • அருகம்புல்லை எடுத்துச் சுத்தம் செய்து 20 கிராம் அளவில் எடுத்து 100 மில்லி தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துச் சாற்றை வடிகட்டி அதிகாலை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும்.
http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit