சிட்னி டெஸ்ட்: அக்ஷர் படேல், ரெய்னாவுக்கு வாய்ப்பு?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அக்ஷர் படேல், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் – காவஸ்கர் டெஸ்ட் தொடரின், கடைசி போட்டி சிட்னியில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்து, ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றதுமே, டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வுக்கு முழுக்குப் போட்டார் இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி.

தோனியின் இந்த திடீர் முடிவால், அணியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் பொறுப்பை விராட் கோலி பார்த்துக் கொள்வார். அதுபோல, ரித்திமான் சாஹா விக்கெட் கீப்பிங் பணியைக் கவனித்துக் கொள்வார். ஆனால், மிடில் ஆர்டரில் களமிறங்கும் வீரர்கள் தேர்வில் ஒரு தெளிவான கண்ணோட்டம் இல்லை.

தவிர, விராட் கோலி பரீட்சார்த்த முடிவுகளை எடுக்கத் தயங்க மாட்டார் என்பதால், களமிறங்கும் 11 பேர் யார் என்பது அவருக்கே வெளிச்சம். இந்தத் தொடரில் ஷிகர் தவனின் பேட்டிங் மோசம். தொடக்க வீரரான அவர், ஆறு இன்னிங்ஸ்களில் 167 ரன்களே எடுத்துள்ளார். எனவே, தவனை வெளியே உட்கார வைத்தாலும் ஆச்சரியமில்லை என்ற பேச்சு அடிபடுகிறது.

சரி, தவன் இல்லையெனில் தொடக்க வீரர் யார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கும் பதில் இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்த லோகேஷ் ராகுலை கை நீட்டுகிறார்கள். ஆனால், கடந்த டெஸ்டில் அவர் ஏமாற்றம் அளித்தாரே என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. “இல்லை, ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே வைத்து, லோகேஷ் ராகுலின் திறமையை முடிவு கட்டிவிட முடியாது’ என தோனி தெரிவித்திருந்தார். எனவே, ராகுலுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கிடைக்கலாம்.

ஒருவேளை தவன் அல்லது ராகுல் இருவரில் ஒருவர் தங்கள் இடத்தை உறுதி செய்து கொண்டால் மிடில் ஆர்டரில் யாரைத் தேர்வு செய்வது? ரோஹித்தா அல்லது ரெய்னாவா என்ற கேள்வி எழும். ரோஹித் இந்தத் தொடரில் தனது திறமையை நிரூபிக்கவில்லை. எனவே, ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆனால், முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் வேடிக்கை மட்டுமே பார்க்க வைக்கப்பட்டார் என்பதும் நெருடலாக உள்ளது.

சிட்னி மைதானத்தைப் பொருத்தவரை மூன்றாவது நாளில் இருந்து ஆடுகளம், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி விடும் என்ற கருத்து நிலவுகிறது. அப்படி எனில், அஸ்வினுடன் அக்ஷர் படேல் களமிறங்க வாய்ப்புள்ளது.

விராட் கோலி தலைமையில் ஏற்கெனவே 9 ஒரு நாள் ஆட்டங்களில் அக்ஷர் படேல் ஆடியிருப்பதால், நிச்சயம் அவருக்கு இடம் கிட்டும் எனத் தெரிகிறது.

“தோனி – கிரிக்கெட்டின் உண்மையான ஜென்டில்மேன் ‘

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றி தோனிக்கு, ஆஸ்திரேலிய துணை கேப்டன் பிராட் ஹாடின் புகழாரம் சூட்டியுள்ளார். ஹாடின் கூறியதாவது:

தோனியிடம் பிடித்த விஷயமே அவரது இயல்பான நிலைதான். ஆட்டம் என்ன சூழலில் இருந்தாலும், அவர் ஆட்டத்தை ஒருவிதமான சுவாரஸ்ய நிலைக்குக் கொண்டு செல்வார். அதனால்தான், கிரிக்கெட்டில் அவரால் இவ்வளவு காலம் நீடிக்க முடிகிறது.

அவரது ஓய்வு ஆச்சரியமாக உள்ளது. தோனி இந்திய கிரிக்கெட்டின் சிறந்த ஊழியன். தன்னையும், அணியையும் அவர் நடத்திய விதம் அருமை. அமைதித்தன்மை, இது இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு கேப்டனாக அவர் செய்த மிக மிக முக்கியமான பணி. தோனிக்கு எதிராக ஆடுவது சிறப்பானது. அவர் கிரிக்கெட்டின் உண்மையான ஜென்டில்மேன். என்னைப் பொருத்தவரையில், அவர் அணியை சரியான இடத்தில் விட்டுச் சென்றுள்ளார் என்றார் ஹாடின்.

விராட் கோலியை எதிர்கொள்வதைப் பற்றிக் கேட்டபோது “நான் இங்கு கோலியைப் பற்றி பேச வரவில்லை’ என்றார் ஹாடின்.

மேலும் அவர் கூறுகையில், “”இந்த டெஸ்ட் தொடரில், எந்த வழியில் ஆட நினைத்தோமோ அந்த வழியில் ஆடினோம்.

இந்தியாவில் ஆடியபோது, முற்றிலும் போட்டியில் இருந்து விலகி இருந்தோம். ஆனால், இங்கு அப்படி இல்லை. சிட்னி டெஸ்டில் சூழல் எங்களுக்கு சாதகமாக இருக்கலாம். ஏனெனில், இந்தியாவை போட்டியில் இருந்து விலகி இருக்கும் நிலைக்குத் தள்ளி விட்டோம்” என்றார்.

மைக்கேல் ஹஸியை பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரைத்தாரா தோனி?

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ஹஸியை தோனி பரிந்துரைத்ததாக, “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிகையில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. இது எந்தளவு உண்மை எனத் தெரியவில்லை.

உலகக் கோப்பையுடன் தற்போதைய பயிற்சியாளர் ஃபிளெட்சரின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, பிசிசிஐ தலைவரிடம் தோனி, மைக்கேல் ஹஸியை பயிற்சியாளராக நியமிக்குமாறு பரிந்துரைத்துள்ளார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மைக்கேல் ஹஸி அமைதியானவர், வீரர்களை வழி நடத்தும் திறமையுள்ளவர், சமகால கிரிக்கெட்டைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர், எனவே அவர் பயிற்சியாளராக இருந்தால், தென் ஆப்பிரிக்காவின் கேரி கிறிஸ்டன் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தபோது,

ஓய்வு அறையில் நிலவிய அற்புதமான சூழலை மீண்டும் கொண்டு வர முடியும் என்று தோனி நம்புவதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆஸ்திரேலியாவில் தற்போது முரளி விஜய் ஜொலிக்க ஹஸிதான் காரணமாக இருந்தார். ஹஸியின் அறிவுரைக்குப் பின்னர் முரளி விஜய் தன்னை மெருகேற்றிக் கொண்டார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தோனியின் பரிந்துரை குறித்து முன்னாள் வீரர்களான சுனில் காவஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பிசிசிஐ ஒரு முடிவுக்கு வரும் என்பதையும் அந்த பத்திரிகை குறிப்பிடத் தவறவில்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*