பயன்படுத்திய நாப்கினை அனுப்பும் போராட்டம்: கேராளவில் விநோதம் !!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

napkin

முத்த போராட்டத்திற்கு அடிகோலிய கேரளாவில் தற்போது நாப்கின் அனுப்பும் போராட்டம் என்ற தொடங்கப்பட்டு உள்ளது.

கேரள தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 40 பெண் ஊழியர்களை ஆடை அவிழ்த்து சோதனை நடத்திய நிர்வாகத்திற்கு எதிராக ‘நாப்கின்’ அனுப்பும் போராட்டத்தை பேஸ்புக் மூலம் தொடங்கியுள்ளனர்.

கொச்சியிலுள்ள ரப்பர் நிறுவனத்தில் கடந்த டிசம்பர் 10ம் திகதி ஒரு மோசமான சம்பவம் நடைபெற்றது.

அந்த நிறுவனத்தின் கழிவறையில் மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினை யாரோ ஒரு பெண் போட்டுள்ளார். கழிவறையில் அதை வீசக்கூடாது என்பது அலுவலக விதிமுறையாகும்.

இதனிடையே பேஸ்புக்கில், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு எதிராக “Red Alert: You’ve Got a Napkin!”என்ற பெயரில் பிரச்சாரம் தொடங்கியுள்ளது.

இந்த பேஸ்புக் பக்கத்தை திருவனந்தபுரத்தை சேர்ந்த மாயா லீலா என்ற இளம் பெண் முன்னெடுத்துள்ளார். இவர், தற்போது ஸ்பெயினில் பிஹெச்டி படித்து வருகிறார்.

மேலும், ஏற்கனவே கேரளாவை கலக்கிய, முத்த போராட்டம் குறித்த கோஷத்தை முன்வைக்க பேஸ்புக்கை பயன்படுத்தியதும், இதே குழுதான் என்று கூறப்படுகிறது.

இந்த நாப்கின் போராட்ட பேஸ்புக் பக்கத்தில் கொச்சியிலுள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் முகவரி தரப்பட்டுள்ளது.

அந்த முகவரிக்கு பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நாப்கின்களை அனுப்பலாம். பயன்படுத்தியதையோ அல்லது பயன்படுத்தாதையோ என எதை வேண்டுமானாலும் நிறுவன மேலாளருக்கு அனுப்ப வேண்டும் என்பது இந்த கோஷத்தின் கோரிக்கை. ஏற்கனவே சிலர் நாப்கின்களை அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit