கத்தார் விமானத்தில் பயணி ரகளை:

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

qutar

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து தோஹா நோக்கி சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டதால் பிரிட்டன் நாட்டின் மான்செஸ்டர் விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட அந்த விமானம், தனது பயண நேரத்தில் பாதி தூரத்தை கடந்து விட்ட நிலையில் திடீரென மான்செஸ்டருக்கு திருப்பி விடப்பட்டதால், அதன் பயண நேரம் தாமதமானது. காலை 8.30 மணியளவில் மான்செஸ்டர் விமான நிலையத்தை தொடர்பு கொண்ட விமானி, அதில் பயணம் செய்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது குறித்து கூறியதுடன் விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார்.

இதையடுத்து காலை 8.55 மணியளவில் மான்செஸ்டர் விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியது. அங்கு காவல்துறையினரும் தயார் நிலையில் இருந்தனர். விமானம் தரையிறங்கியவுடன் விரைந்து சென்ற காவல்துறையினர் ரகளையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit