விஷேட தேவையுடைய சிறுவனுக்கு வர்த்தக சங்கத்தினரால் வீடு கையளிப்பு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியா வர்த்தகர் சங்கத்திலுள்ள வர்த்தகப்பிரமுகர்கள் ஒன்றிணைந்து விஷேட தேவைக்குட்பட்ட 15வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு மலசலகூடத்துடன் படுக்கை அறையை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

வவுனியா, மாமடு, நெலுங்குளம் பகுதியில் வசித்து வரும் அனோமாகுமாரி என்ற பெண்மணிக்கு நிலுச லக்மால் என்ற 15வயதுடைய விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனை கணவனின் உதவி இன்றி தனியாக பராமரித்து வருவதில் பெரும் சிரமத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் அதற்காக தனியான படுக்கை அறையுடன் கூடிய மலசல கூட கட்டடத் தொகுதி ஒன்றினை அமைத்துத்தருமாறு வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னார் கோரியுள்ளார்.

இதனையடுத்து வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் வவுனியா வர்த்தக சங்க பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வர்த்தக பிரமுகர்கள் 4பேர் ஒன்றிணைந்து இரண்டு இலட்சத்து ஜம்பதினாயிரம் ரூபா பெறுமதியான படுக்கை அறையுடன் கூடிய மலசல கட்டடத்தினை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து நேற்று வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் கலந்து கொண்டு பயனாளிகளிடம் புதிய கட்டிடத்தினைக் கையளித்தார்.

இதன் போது வர்த்தக பிரமுகர்களுக்கு நினைவுப்பரிசும் , விஷேட தேவைக்குட்பட்ட சிறுவனுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி. ஸ்ரீஸ்கந்தராஜா. எம்.கே. லியகத் அலி ,ஆ. அம்பிகைபாகன், எஸ். ஆனந்தராஜா, ரி. சிவரூபன், எஸ். சுஜன், வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பொதுமக்கள், பௌத்த சமயத்தலைவர்கள், மாமடு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*