விஜயதாஸ ராஜபக்ஷ விடயத்தில் சுதந்திரக் கட்சி தலையிட விரும்பவில்லை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vijathasa

பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ விடயத்தில் சுதந்திரக் கட்சி தலையிட விரும்பவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, விஜயதாஸ ராஜபக்ஷ விடயத்தில் சுதந்திரக் கட்சியில் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்திய தயாசிறி ஜயசேகர, விஜயதாஸ ராஜபக்ஷவின் பதவி நீக்கம் தொடர்பான பிரச்சினை ஐ.தே.க. விவகாரம் என்றும் அதில் சுதந்திரக் கட்சி தலையிட விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கத்தை ஐக்கிய தேசிய கட்சி நடத்துவது போன்று தோன்றுகின்றதே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ஐக்கிய தேசிய கட்சியின் விவகாரத்தை கையில் எடுக்க விரும்பவில்லை. இரண்டு கட்சிகளும் இணைந்தே நாட்டை ஆட்சி செய்கின்றன. எனவே கருத்து முரண்பாடுகள் ஏற்படலாம். ஆனாலும் தீர்மானங்கள் எடுத்த பின்னர் இணைந்தே பயணிக்க வேண்டும். விஜயதாஸ விடயத்தில் ஜனாதிபதியோ, சுதந்திர கட்சியோ பேசவில்லை. அரசாங்கத்தின் பொதுவிடயங்கள், தனிப்பட்ட விடயங்கள் என பல விடயங்கள் உள்ளன. இவற்றை புரிந்துகொண்டு கட்சி என்ற ரீதியிலும் அரசாங்கம் என்ற ரீதியிலும் பயணிக்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit