இந்தியாவில் ஆறு விமான நிறுவனங்கள் புதிய சேவை:அசோக் கஜபதி ராஜு

பிறப்பு : - இறப்பு :

2015ம் ஆண்டு முதல் இந்தியாவில் 6 விமான நிறுவனங்கள் புதிய சேவையைத் துவக்க உள்ளன என்று, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் பல்வேறு துறையில் முதலீடுகள் செய்தவண்ணம் இருக்க, வரும் புத்தாண்டில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்தியாவில் தமது புதிய சேவையைத் துவக்க உள்ளன என்று அசோக் கஜபதி ராஜு தெரிவித்துள்ளார்.இதனால் மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் வருவாய் ஈட்ட முடியும் என்பதால், மாநில அரசுகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏர் ஏஷியா உள்ளிட்டபல்வேறு நாடுகளின் 6 விமான நிறுவனங்கள் தங்களது சேவையை இந்தியாவில் துவக்க உள்ளன என்றும் அவர் மேலும் தமது தகவலில் கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit