மைத்திரிபாலவுடன் இனைந்து கொள்வதற்க்கு தாமதம் ஏன்:பைசர் முஸ்தபா

பிறப்பு : - இறப்பு :

நான் நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றியுள்ளேன் என்றும், எதிர்காலத்தில் நாட்டுக்கு மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் முக்கியத்துவம் அறிந்தே மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவினை எடுதுள்ளதாகவும், முஸ்லிம் மக்களை மட்டும் பிரதிநித்துவப்படுத்தும் அரசியல் வாதியாக நாட்டில் செயல்படுவதற்கு நான் ஒரு போதும் விருப்பப்படுவதில்லை என்பதோடு.

முஸ்லிம், இந்து, சிங்களம் போன்ற மதவாதத்தினை நான் எப்போதும் எதிர்ப்பவன் என்றும் அதனால்தான் இன்றும் இந்த இடத்தில் உடகார்ந்து கொண்டு பைசர் முஸ்தபா அரசியல் செய்யும் நிலைமையில் இருக்கின்றார் எனக் கூறியதுடன், அதன் பலனாகவே கண்டி மாவட்டத்தில் அதிகப்படியான சிங்கள வாக்குகளை பெற்றுள்ளதோடு இலங்கையிலும் எனது விருப்புவாக்குகளே சிறுபான்மை சமூகத்தை பிரதி நிதித்துவப் படுத்திய ஒருவர் பெற்றுள்ள அதிகப்படியான விருப்பு வாக்குகளாக காணப்படுகின்ரமையை இட்டு தான் பெருமை அடைவதாக மைத்திரிபாலவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு எதிர்க் கட்ச்சித் தலைவரின் உத்தியோக பூர்வ காரியாலையத்தில் இடம் பெற்ற ஊடக வியலாளர் கூட்டத்தில் பதிலளித்தார்.

புதன்கிழம (31.12.2014) ஒரு மணியளவில் இடம்பெற்ற இவ்வூடகவியலாளர் சந்திப்பில் பாராளமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ஹர்சடி சில்வா, மேல் மாகனா சபை உறுப்பினர்களான கிரூனிக்கா பிரேமசந்ர, மரைக்கார், ஆகியோர்கள் முக்கியமாக கலந்து கொண்டதோடு, ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் , ரணில் விக்ரமசிங்கவும் திடீர் என மண்டபத்துக்குள் நுழைந்து பைசர் முஸ்தபாவுக்கு கைகொடுத்து வாழ்த்து பரிமாறிச் சென்றார். இதற்கு முன்பாக காலையில் விகாரமாதேவிப் பூங்காவில் ஐக்கிய தேசியக் கட்ச்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டு மைத்திரிபால கலந்து கொண்டிருந்த பெண்களுக்கான மாகாநாடிலும் பைசர் முஸ்தபா வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொடர்ந்து கேட்கப்பட்ட கேள்வியான இதற்குப் பிறகு வருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியிலா அல்லது புதுக் கட்சி ஆரம்பித்து அதில் போட்டியிடுவீர்களா எனக் கேட்கப்பட்டதற்கு… தான் இலங்கை சுதந்திரக் கட்சியை சேர்ந்தவன் என்ற படியினாலும் அது போலவே மைத்திரிபால சிறிசேனவும் சுதந்திரக் கட்ச்சியினை பிரதி நிதித்துவப் படுத்துபவர் என்ற வகையிலும் எனக்கு ஐக்கிய தேசியக் கட்ச்சியின் அங்கத்துவம் தேவைப்படாது எனத் தெரிவித்தார்.

அது போலவே பைசர் முஸ்தாபா இன்று வருவார் அல்லது நாளை மைத்திரிபாலவுடன் இனைந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புக்கள் நாளுக்கு நாள் அடிபட்ட்டுக் கொண்டிருந்த நிலையில் மைத்திரிபாலவுடன் இனைந்து கொள்வதற்க்கு தாமதம் ஏன் ஏற்பட்டதென்றால்?, ஜனாதிபதியுடனும், கோத்தாபய ராஜபக்ஸ்ஸவுடனும் இருந்து வந்த தனிப்பட்ட நட்பே காரணமாகும். ஆனால் நாங்கள் அரசியல் செய்யும் போது தனிப்பட்ட ரீதியிலான நட்புக்களை தள்ளிவைத்து விட்டு கொள்கை ரீதியான தீர்மானம் எடுப்பதே சிறந்த முடிவாகும். அந்த வகையில் பார்க்கும் போது இந்த நாட்டில் முப்பது வருடங்கள் நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்க்கு முக்கிய காரனமாக இருந்த அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கோத்தாபய ராஜ்பக்ஸ்ஸ போன்றோர் சென்ற யுத்த யுகத்துக்கு நாட்டிற்க்கு முக்கியமாக தேவைப்பட்டவர்கள் ஆனால் அடுத்த யுகத்துக்கு மைத்திரிபாலவின் ஆட்ச்சியே முக்கியம் என்ற முடிவு எனக்கு சரியாக தென்பட்டதினால்தான் நான் மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கும் தீர்மானத்தைன் எடுதுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பைசர் முஸ்தபா தெரிவித்த கருத்துக்களும், ஊடகவியலாளர்களின் கேள்விக்கான பதில்களும் விரிவன முறையில் காணொளிகளாக எமது இணைய நளிதல் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit