சவுதி மன்னர் அப்துல்லா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துலாஷிஸ் புதன்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் அந்நாட்டு ரோயல் நீதிமன்ற அறிக்கையைச் சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்த அறிக்கையில் தற்போது மன்னரது உடல்நிலை எவ்வாறுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப் படவில்லை.

90 வயதாகும் சவுதி அரேபியாவின் மன்னரான அப்துல்லா அந்நாட்டை 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி செய்து வருகின்றார். மேலும் வாஷிங்டனிலுள்ள சவுதி தூதரகத்தின் தகவல் படி அப்துல்லா 1924 ஆம் வருடம் ரியாத் இல் பிறந்ததாகத் தெரிய வருகின்றது. 1982 ஆம் ஆண்டு முடி சூட்டப் பட்ட இவர் தனது சகோதரரான மன்னர் ஃபாஹ்ட் மரணித்த பின்னர் 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்திருந்தார். மேலும் தனது பதவிக் காலத்தில் இவர் சவுதியின் எண்ணெய் வளம் தொடர்பான கல்வி மற்றும் உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை நன்கு திட்டமிட்டு மேம்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

எனினும் சவுதியில் உள்ள முஸ்லிம் பெண்களது அடிப்படை உரிமைகள் தொடர்பான விடயங்களில் அவர்களது சுதந்திரத்துக்கு இவர் தடையாக இருந்தார் என்ற விமர்சனமும் இவர் மீது உள்ளது. இருந்த போதும் மன்னர் அப்துல்லாவின் ஆட்சியில் சவுதியில் அல்கொய்தா போராளிகள் ஒடுக்கப் பட்டதுடன் அதன் தலைவர்கள் சிலர் கைப்பற்றப் பட்டும் கொல்லப் பட்டும் இருந்தனர். மேலும் இக்காரணத்தால் மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புறவை சவுதி உருவாக்கிக் கொள்ள இயன்றது. தற்போது சிரியா மற்றும் ஈராக்கில் ISIS போராளிகள் மீது அமெரிக்க மற்றும் கூட்டணி நாடுகளின் விமானத் தாக்குதலில் பங்கேற்றுள்ள முக்கிய அரபு தேசமாக சவுதி விளங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*