சேலையிலும் கிளாமராக அமலா பால்!

பிறப்பு : - இறப்பு :

2006 ஆம் ஆண்டில் சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், மாளவிகா, சோனியா அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘திருட்டு பயலே’ திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிப்பெற்றது. இந்நிலையில் அதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது.

திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இதில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால், பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குநர் சுசி கணேசன் குறிப்பிடுகையில், இந்தப் படத்தின் ஹீரோயின் ஹோம்லியாகவும், அதேசமயம் கிளாமராகவும் இருக்க வேண்டும். சேலையிலும் கிளாமராக இருப்பார் அமலா பால் என்பதால் தான் அவரைத் தேர்ந்தெடுத்தேன்- என்றார்.

அண்மையில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகிய முதலே பல விவாதங்களை கிளப்பியுள்ளது. ‘சிந்து சமவெளி’யில் அறிமுகமாகிய அனகா (அமலா பால்), அப்படத்தில் மிகக் கவர்ச்சியான பாத்திரத்தை ஏற்றிருந்தார்.

பின்னர் ‘மைனா’வில் தனது பெயரை மாற்றிக்கொண்டு புது அவதாரமெடுத்த அவர், அதன் பிறகு குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் அவரின் திருமணமும் இடம்பெற்றது. தற்போது, விவாகரத்தாகியுள்ள அமலா பால், மீண்டும் முழு வேகமாக நடித்து வருகின்றார்.

கவர்ச்சியான வேடங்களிலும் தாராளமாக நடித்துவரும் அமலா பால் பக்கம் பல்வேறு இயக்குனர்களின் கவனம் திரும்பியுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit