புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களிடம் சரணடைந்துள்ள கேப்பாபுலவு மக்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஈழத்தமிழ் மக்களது விடுதலையில் அக்கறை உடைய அனைவரும் திரண்டு வந்தால், கேப்பாபுலவு மக்களது காணிகளை மீட்பதற்கு ஏதேனும் வழி பிறக்கும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாபுலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

தாயகத்தில் உள்ளோர் மாத்திரமன்றி புலம்பெயர் நாட்டில் உள்ள மக்களும் தமக்கு ஆதரவு வழங்கி, ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இராணுவத்தினால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் முன்னெடுத்துவரும் தொடர் போராட்டம் இன்று 175 ஆவது நாளை எட்டியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தை வாட்டி வதைக்கும் கொடூர வெய்யிலினாலும் இடையிடையே பெய்யும் மழையினாலும் பாதிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், உண்ண உணவின்றி, தங்குவதற்கு இடமின்றி அல்லோலகல்லோலப்படும் நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலும் தளராத உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மக்கள், அரசியல்வாதிகளால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுள்ள நிலையில், புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகளாவது தங்களை மனிதர்களாக மதித்து தமது காணியை மீட்பதற்கு ஏதேனும் வழிகளில் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை மக்கள் பிரதிநிதிகள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், உண்மையில் மக்களுக்காக போராடியிருந்தால் போராட்டம் ஆரம்பமாகி இவ்வளவு நாட்களுக்குள் தீர்வு கிடைத்திருக்கும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அங்கலாய்த்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*