பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிடுகின்றார்!

பிறப்பு : - இறப்பு :

பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிடுகின்றார். கடந்த வருடம் யாழ் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரு பல்லைக்கழக மாணவர்கள் உயிரிழந்திருந்தனர். அவர்களில் கிளிநாச்சி பகுதியை சேர்ந்த நடராசா கஜன் என்ற மாணவனின் குடும்பத்தாருக்கு இழப்பீடுகள் வழங்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் வாக்குறுிதி வழங்கியிருந்தார். குறித்த வாக்குறிதியில் எவையும் நிறைவேற்றப்படவில்லை என கஜனின் தாயார் இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த கஜனின் குடும்பத்தினருக்கு வீடு அமைத்து கொடுப்பதாகவும், கல்வி கற்று வீட்டில் உள்ள ஒருவருக்கு அரச வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என அவர் தெரிவிக்கின்றார். வீட்டுத்திட்டம மூலம் வுீடு ஒன்றை பெறுவதற்கு தான் பல்வே முயற்சிகள் எடுத்ததாகவும், அதன் மூலம் வீட்டுத்திட்டம் ஒன்று கிடைத்துள்ள போதிலும் வீட்டை கட்டி முடிக்க முடியாது போயுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தனக்கு எவ்வித உதவியும் கிடைக்காவிட்டாலும் பறவாயில்லை. எனது பிள்ளையின் மரணத்திற்கு நீதி வேண்டும் என அவர் இதன் போது தெரிவிக்கின்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit