பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு குழு அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக முடிவு ஏற்பட்டுள்ளதால் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இது குறித்து சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் கூறுகையில், போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இன்று காலை பேச்சுவார்த்தை நடந்தது. இதில் போக்குவரத்து கழகத்தின் 11 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிக்க விரைவில் குழு அமைக்கப்படும் அந்தக் குழுவினருடன் தொடர்ந்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம். வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஊழியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என அரசு உறுதியளித்துள்ளது” என்றார்.

3 நாள் போராட்டம்:

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தக் கோரி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 28-ம் தேதியில் இருந்து தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். தொமுச, சிஐடியு உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள் இதில் கலந்துகொண்டன.

முதல் நாளில் அரசு பஸ் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிமுக தொழிற்சங்கத்தினர் மற்றும் பணி நிரந்தரம் ஆகாத தொழிலாளர்களை வைத்து பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தது. எனினும் குறைந்த அளவு அரசு பஸ்களே இயக்கப்பட்டதால் பொதுமக்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கடும் அவதிப்பட்டனர்.

பணிமனைகள் முன்பு திரண்டு பஸ்களை எடுக்க விடாமல் மறியல் செய்த தொழிற்சங்கத்தினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.

3-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அரசுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையரக அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில், தொழிலாளர் நலத்துறையின் தனித் துணை ஆணையர் யாஸ்மின் பேகம், நிர்வாகம் தரப்பில் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் ஆல்பர்ட் தினகரன், தொழிற்சங்கங்கள் சார்பில் சண்முகம் (தொமுச), நடராஜன் (தொமுச), சவுந்தரரராஜன் எம்எல்ஏ ( சிஐடியு), லட்சுமணன் (ஏஐடியுசி) உட்பட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் 22க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டரை மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தை நீடித்தது. தங்கள் கோரிக்கைள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இன்று (புதன்கிழமை) காலை பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேருந்து போக்குவரத்து விரைவில் சீர் செய்யப்படும் என சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*