
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வரும் புதன்கிழமை தான் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பல மாதங்களாக பிளவுபட்டு இருந்த ஓ.பி.எஸ் தலைமையிலான அணி இன்று ஈ.பி.எஸ் தலைமையிலான அணியுடன் இணைந்தது.
தினகரன், சசிகலா ஆகியோருக்கு எதிராக அணிகள் இரண்டும் இணைந்ததால், விரக்தியடைந்த தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் இன்றைய ஆலோசனை முடிந்தபின் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்றனர்.
முன்னதாக தினகரன் ஜெயலலிதா சமாதிக்கு வருவதாக செய்திகள் வந்த நிலையில், அவருடைய எம்.எல். ஏக்களான பழனியப்பன் செந்தில் பாலாஜி, முத்தையா, சுப்பிரமணின் உள்ளிட்ட 18 பேர் ஜெ., சமாதியில் தியானத்தில் ஈடுப்பட்டனர்
இதனிடையே டி.டி.வி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு காய்ச்சல், தொண்டை வலி இருப்பதால், மருத்தவரின் ஆலோசனைப்படைி ஒய்வில் இருப்பதாகவும், வரும் 23 ம் தேதி செய்தியாளர்களை சந்திப்பதாகவும் கூறினார்.