இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இது ஆங்கிலப் புதுவருடமாயினும் உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் தம் அலுவலக மற்றும் தொழிலுக்கான புதுவருடமாவும் இருக்கிறது எனவே இதனைக் கொண்டாடுவது தவிர்க்க முடியாத்தாகிவிட்டது. பிறக்கும் இப்புதிய ஆண்டு எம் எல்லோருக்கும் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் தமிழர் வாழும் தேசமெங்கும் அமைதியையும் கொண்டு வந்து தமிழர்கள் எல்லோரையும் வளப்படுத்தட்டும்.

குறிப்பாக ஈழத்தில் வாழும் எம்தமிழ் உறவுகள் போர் முடிவடைந்து ஐந்து வருடங்கள் கடந்தும் இன்னும் அதன் வடுவிலிருந்து விடுபடவில்லை. அத்துடன் அவர்தம் பொருளாதார நிலையும் மேம்படவில்லை. கடந்த ஆண்டு வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு என்று இயற்கையும் அவர்களை வாட்டி எடுத்துவிட்டது.

மேய்ப்பனின்றி இருக்கும் எம்மினத்தைக் காப்பாற்ற அந்தக்கடவுளிடம் பாரத்தை விட்டு விட்டு இப்புதிய ஆண்டை புதிய சிந்தனைகளுடனும் எண்ணங்களுடனும் எதிர்கொள்வோம் என்று கூறி கதிரவன்.கொம் தன் வாசகர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவருக்கும் உளம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

குறிப்பாக எமது விளம்பரதாரர்களின் இடையறாத ஆதரவினாலும் அன்பினாலேயுமே எம்மால் இந்த போட்டி மிகு ஊடகத்துறையில் நிலைத்து நிற்கமுடிகிறது என்றால் அது மிகையல்ல. அவர்களின் ஆதரவை நன்றியுடன் இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கின்றோம்.

நாம் இத்தனை காலமும் வரித்துக்கொண்ட கொள்கையான தமிழர் நலன், விடுதலை என்பவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயலாற்றியிருந்தோம். தொடர்ந்தும் நாம் தமிழர்களின் நலன்சார்ந்த எந்தவிடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவோம் என்று உறுதிகொள்கிறோம்.

நன்றி.

கதிரவன் குழுமம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*