சதுரங்க ஆட்டத்தில் தமிழக அரசியல்: விடுதலைக் காய் நகர்த்தும் சசிகலா!

பிறப்பு : - இறப்பு :

பிளவு பட்ட அ.தி.மு.கவின் அணிகள் தொண்டர்களில் விருப்பம் இன்றி சுயநலத்தோடு இணைந்தால் அதன் ஆயுள் நீடிக்காது என டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்தித்து ஆலாசனைகள் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சசிகலா மீது எந்த வித தவறும் இல்லை என நிரூபித்து அவரை விடுதலைச் செய்வோம் எனக் குறிப்பிட்டுள்ள தினகரன் ஜெயலலிலா மரணத்திற்கு முதல்வரால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவால் தமக்கு எந்தவித பின்னடையும் இல்லை எனக் கூறியுள்ளார்.

முதல்வர் பழனிசாமி அணியில் தமக்கு ஆதரவு தெரிவிக்கும் அமைச்சர்கள் இருப்பதாக தெரிவித்த அவர் தத்தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள அணிகள் இணையுமானால் அவை நிலைத்து நிற்காது. அடுத்தடுத்து எமது திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஓ.பி.எஸ் மற்றும் பழனிசாமி அணியினர் இன்று இணைப்பு தொடர்பில் முக்கிய கூட்டத்தினை கூட்டவுள்ள நிலையில் சசிகலாவின் விடுதலைக் குறித்தும், அணிகள் இணைவது குறித்தும் தினகரன் கருத்து தெரிவித்துள்ளமையினால் மேலும் சர்ச்சைகள் வலுப்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit