
இன்றைக்கு 35 வயதைத் தாண்டி விட்டாலே பல பெண்களுக்கு மனதில் எழும் பொதுவான சந்தேகம் நமக்கு செக்ஸ் உணர்ச்சிகள் குறைந்து விட்டதா என்பதுதான்.
ஆனால் அது போன்ற கவலை தேவையில்லை என்று உளவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களின் மனதில் இனி நம்மால் தாம்பத்திய உறவில் முன்பு போல ஈடுபட முடியாதா, உச்ச நிலையை அடைய முடியாம போய்விடுமோ என்ற எண்ணம் பரவலாக எழுகிறது.
மேலும் 30 வயதைத் தாண்டி விட்டாலே செக்ஸ் உணர்வுகள் குறையத் தொடங்கிவிடும் என்ற பரவலான கருத்தும் அவர்களிடம் நிலவி வருகிறதாம். இதற்குக் காரணம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பெண்களுக்கு ஏற்படும் மாற்றம் தான் என்கின்றனர் நிபுணர்கள்.
தாம்பத்ய உறவின்போது உச்சநிலை எனப் படும் கிளைமேக்ஸ் சரியாக இல்லையெனி ல் திருப்தி என்பது ஏற்படாது. கிளைமேக்ஸ் பிரச்சினை பிறப்புறுப்பின் வலியினாலும், வறட்சியினாலும் ஏற்படும்.
மேலும் 35 வயதிற்குமேல் பெண்களுக்கு உடல் பருமன், நீரிழிவு போன்றவை இருந்தாலும் உச்ச நிலையை உணர்வதில் பிரச்சினை ஏற்படும்.
30வயதைத் தாண்டிவிட்டால் இனி செக்ஸ் வாழ்க்கை முன்புபோல இருக்காது, அவ்வளவுதான் என்ற எண்ணத்தை தயவு செய்து மறந்து விடுங்கள். 20 வயதுகளில் எப்படி செக்ஸை அனுபவித்தீர்களோ அதேபோன்று 30 வயதைத் தாண்டிய பின்னரும்கூட அனுபவிக்கலாம்.
அதற்கு ஒரே முக்கிய தேவை உங்களது மனதை நிதானமாக வைத்துக்கொள்வது மட்டுமே. உண்மையில் 30 வயதுக்குமேல் தான் செக்ஸ் வாழ்க்கையில் நிம்மதியாக, பரி பூரணமாக, முழுமையான இன்பத்துடன் ஈடு பட முடியும். இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.