யாரு வரப்போறாங்க புள்ள……….

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாருவரப்போறாங்கபுள்ள

போன இலக்சனுக்கு
இளிச்சிக்கிட்டு போன எம்.பி
எம்மை நம்பி
ஊருக்குள்ள
ஊர்வலமாய்
வாராரு புள்ள.

கிடுகு கூரையை
ஓட்டுக்கூரயாய்
மாற்றித் தருகிறேன்
ஓட்டுப் போடுங்கள் என்றவரு
இந்த இலக்சனுக்குத்தான்
வாரார்
எமது கிடுகுக் கூரையோ
இத்துப்போய்
வானம் எட்டிப் பார்த்து
சிரிக்கிறது
நமது உள்ளுட்டைப்பார்த்து.

கோசங்ளாலும்
வேசங்களாலும்
பாசாங்கு காட்டி
வங்கிக் கணக்கை
நிரப்பிகொள்கிறார்கள்,
நமதுவயிறோ
இன்னும்
பட்டிணியால்
பரலோகம் காணும்
நாட்களை
எண்ணிக்கொள்கிறது புள்ள.

பொய்யும் ஏமாற்றமும்
சண்டித்தனமும்
சந்திக்குவர
சக்தியுள்ளவர்கள்
சனங்களின்
கனவுகளை எரித்து
மனங்களை வென்று
தம் கனவுகளை மட்டும்
நிஜங்களாய்
நிலையாக்கிக் கொள்கின்றனர்.

ஓவ்வொரு
தேர்தலிலும்
நம்மை ஏமாற்றி பிழைக்கும்
இந்த வியாபாரிகளை
நம்ம மடச்சனங்கள்
எப்ப புள்ள
புரியப்போகிறது.

நம்ம குடிலுக்குள்ள
நாளைய சோற்றுக்கு
ஓன்றுமே இல்லை
ஆனா நம்ம எம்.பிக்கு
பத்து தலமுறக்கி
அசயாம திங்குறத்துக்கு
அசயா அசயும் சொத்து
நம்ம முள்ளிமல அளவுக்கு
கெடக்குதாம் புள்ள.

எம்.பிட தம்பி செய்த
கொந்தறாத்து றோட்டெல்லாம்
மழையோடு கரஞ்சு
குமிழியாகி காணாமல்
போயிட்டு புள்ள,
வடிச்சல் வாய்க்காலும்
காணாத்தகாசு போல்
தொலஞ்சு ராமர் பாலமாய்
சரித்திரத்தில் சஞ்சரிக்கப்
போகிறது புள்ள.
தேர்தலோடு
எம்.பி மாரும்
ஏமாற்றிப் போறாங்க
நம்ம
ஏழ்ம மட்டும்
ஏமாறமல்
ஏணியிலே
ஏறுதே புள்ள

நம்ம வறுமய
கழுவி விட்டு
கண்ணீரில்
கரயும் நமது
கனவுகள்
கரசேர்க்க
கனவான்
யாரு வரப்போறாங்க புள்ள.

பாலமுனையு.எல். அலி அஷ்ரஃப்

 

 

 

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*