ஆரவ்வை என்னால் மறக்க முடியாது; உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்!

பிறப்பு : - இறப்பு :

பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவி‌ஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து அனுயா, நமீதா, பரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் வெளியேற்றப்பட்டு புதிதாக நடிகை பிந்து மாதவி சேர்க்கப்பட்டுள்ளார். ஓவியா தினமும் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள்.

அப்போது தனக்கு ஆறுதலாக இருந்த நடிகர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. ஆரவ் நாகர்கோவிலை சேர்ந்தவர். தற்போது திருச்சியில் குடும்பத்துடன் தங்கி இருக்கிறார். இவர் 300–க்கும் மேற்பட்ட டெலிவி‌ஷன் விளம்பர படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியுடன் சைத்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரவ் நெருக்கமாக பழகியதால் அவர் தன்னை காதலிப்பதாக ஓவியா நம்பினார். காதலை அவரிடம் நேரில் தெரிவித்தபோது நான் உன்னை காதலிக்கவில்லை என்று சொல்லி ஆரவ் பின்வாங்கினார். அதன்பிறகு ஓவியாவிடம் பேசுவதையும் தவிர்த்தார். ஓவியாவால் ஆரவ்வை மறக்க முடியவில்லை. பின்னாலேயே சுற்றினார்.

பின்னர் காதல் தோல்வியால் மன அழுத்தத்துக்கு உள்ளானார். வீட்டுக்கு வெளியில் கொட்டும் மழையில் பாயை விரித்து படுத்தார். விடிய விடிய பிக்பாஸ் வீட்டுக்குள் தூங்காமல் சுற்றிக்கொண்டு இருந்தார். ஒரு கட்டத்தில் அங்குள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஓவியாவை மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. காதல் தோல்வியால் அழுதுகொண்டு இருந்த அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். காதல் வலையில் சிக்கிய ஓவியாவின் மன நிலையை அறிய அவரிடம் நடிகர் கமல்ஹாசன் கேள்விகள் கேட்டார். அதற்கு ஓவியா அளித்த பதில் வருமாறு:–

‘‘நான் காதல் வலையில் சிக்கியது உண்மைதான். அதில் சில தெளிவுகள் கிடைத்து இருக்கிறது. ரசிகர்கள் என்மீது அளவு கடந்த அன்பு வைத்து இருப்பதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்களுக்கு எனது நன்றியை எப்படி திருப்பி செலுத்தப்போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்.

ஆரவ் எனது வாழ்க்கையில் முதுகெலும்பு போன்றவராக இருக்கிறார். நான் உயிருக்கு உயிராக அவரை காதலிக்கிறேன். அவரை என்னால் மறக்க முடியாது. ஆரவ் இல்லாமல் நான் இல்லை. ஆரவ்வுக்காக நான் காத்து இருப்பேன். அவர் விரைவில் என்னிடம் வருவார்.’’ இவ்வாறு ஓவியா கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit