பிக்பாசில் கலந்து கொள்ள ஜெயம் ரவியுடன் விஜய் டிவி பேச்சுவார்த்தை!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் நடத்தப்பட வேண்டும். இதுவரை 5 வாரம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 8 வாரம் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் போட்டியாளர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர். இன்னும் 2 பேர் வரை தேவை.

ஏற்கனவே புதிய வரவாக வந்த பிந்து மாதவியும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

எனவே இதனை ஈடுகட்ட வலுவான புதிய நபர் ஒருவரை விஜய் டிவி செலக்ட் செய்து விட்டதாம். அவரை இந்த வாரம் ஞாயிற்றுகிழமை களம் இறக்க உள்ளதாம்.

அது மட்டும் அல்லாமல் சினிமாவில் குத்து சண்டை வீரராக நடித்த ஒருவரைத்தான் களம் இறக்கப்போகிறது என்று தகவல்கள் கூறுகின்றன.

அப்படி பார்த்தல் ஜெயம் ரவி மற்றும் ரித்திகா சிங் ஆகியோர்தான் குத்து சண்டை வீரராக நடித்தவர்கள்.

இதில் ஜெயம் ரவியை தொடர்பு கொண்டபோது முதலில் சந்தோஷமாக ஒப்பு கொண்டாராம். அவரும் சிறப்பு அழைப்பாளர் என நினைத்து விட்டார்.

ஆனால் 10 நாட்கள் போட்டியாளர்களுடன் தங்கி இருக்க வேண்டும் என்று கூறியவுடன் அதிர்ச்சி அடைந்து விட்டார்.

இதனால் இதனை அடுத்து அவர் விஜய் டிவிக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. ஜெயம் ரவி அப்படியே வந்தாலும் சிறப்பு அழைப்பாளராக மட்டுமே வருவார்.

எனவே அடுத்து யாரை அழைத்து வருவது என்று பலரை டிக் செய்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்று அல்லது நாளை உறுதியாக தெரிந்து விடும் என்று தெரிகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit