நெடுநாட்கள் பயன்படுத்தாத பொருள் என்ன ஆகும் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

முருகனுக்கு 40 வயது, எதிர்பாராமல் வந்த மார்பக புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட, தனிமையில் வாடினார். இதனால் குழந்தை இல்லாததால் மேலும் வருத்தம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில், முருகன் வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளராக இருந்த அனிதா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றி வந்தனர்.

அனிதாவுக்கு 37 வயதாகியும் திருமணம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இனிமே திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்த தருணத்தில்தான் முருகனின் அன்பு கிடைத்தது. இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

திருமணம் செய்து கொள்ள ஒரு வாரம் இருந்த நேரத்தில் அவர்களுக்குள் இருக்கும் செக்ஸ் உணர்வு பாடாய் படுத்தியது. இந்த நேரத்தில் உறவு கொள்ள முயன்றனர்.

முருகனுக்கு உடலுறவில் சரிவர ஈடுபட முடியவில்லை. அவரது ஆண்குறி விறைப்புத்தன்மை அடையவில்லை. அவரது ஆண்மையின் மீது அவருக்கு சந்தேகம் வந்தது. இனிமேல் உறவில் ஈடுபட முடியாமல் போய்விடுமோ என்று பயந்தார்.

அதே நேரத்தில் அனிதாவுக்கும் அதே சந்தேகம் இருந்தது. உடனே இருவரும் டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள முடிவெடுத்து பாலியல் டாக்டரை சந்தித்தனர்.

டாக்டரோ பாலியலில் எந்த பிரச்சனையும் வராது, தாராளமாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வரலாம் என்று கூறிவிட்டார்.

முருகனுக்கு எதற்கு இந்த பிரச்சனை வந்தது?

துணையை இழந்த பிறகு ஒருவித வெறுமை மனநிலையில் வெகு நாட்கள் உறவில் ஈடுபடாமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை.

நீண்ட நாட்களாக செக்ஸ் வைத்துக்கொள்ளாமல் இருப்பதும் மனதில் பல கஷ்டமான விஷயங்களை போட்டு பூட்டி வைத்திருப்பதும்தான் உடலுறவில் சரியாக ஈடுபட முடியாமைக்கான காரணமாக அமைந்து விடுகிறது.

இது போன்றோருக்கு மனநிலை ஒரே மாதிரியாக இருக்காது. மனைவி இழந்த அதிர்ச்சியில் மீண்டு வருவதற்குள் வெகுகாலம் ஆகிறது.
மனரீதியில் ஓரளவு நார்மலாகி மறுதிருமணம் செய்ய முடிவெடுக்கும்போது செக்ஸில் பயிற்சியின்றி இருக்கிறார்கள்.

செக்ஸ் உணர்வு எல்லோருக்கும் எளிதாக வரும்.ஆனால், அதற்கான திறன் இருந்தால்தான் இயங்க முடியும். தொடர்ந்து முயற்சி மற்றும் பயிற்சி காமத்தின் இரண்டு கண்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஒரு விளையாட்டு வீரர் பல ஆண்டுகளாக விளையாடாமல் இருக்கிறார். திடீரென ஒரு நாள் மைதானத்தில் இறங்கி போட்டியில் கலந்து கொள்ளச் சொன்னால் அவரால் விளையாட்டில் சரிவர ஈடுபட முடியாது.

அது போலத்தான் காமக்கலையும், தொடர்ந்து பயிற்சி அவசியம் இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்கள் தேவையற்ற ஒரு பயமே இதற்கு காரணமாக அமைந்து விடும்.

எந்த உறுப்பையும் நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் விட்டு விட்டால் அதனின் தன்மை திறனற்று போய்விடும்.

அது போலத்தான் மனிதனின் உறுப்புகளும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். செக்ஸ் என்பது யாரும் கட்டுப்படுத்த முடியாது, அது ஒரு தவறே கிடையாது.

என்ன பிரச்சனை வந்தாலும் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*