செவ்வாய் கிழமை முடி வெட்டக்கூடாது ஏன்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

hair

வாழ்க்கையின் நடைமுறையில் நம் முன்னோர்கள் பின்பற்றப்படும் ஒருசில மூட நம்பிக்கை பழக்கங்களில் உள்ள உண்மையான காரணங்களை பற்றி காண்போம்..

வெளியில் செல்லும் முன் தயிர் சர்க்கரை சாப்பிடுவது ஏன்?

வெளியே செல்வதற்கு முன் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் அது நம் உடலுக்கு உடனடி க்ளுகோஸாக செயல்படும். அதனால் கோடைகாலத்தில் இப்பழக்கத்தை அதிர்ஷ்டமாக நினைத்து பின்பற்றுவார்கள்.

செவ்வாய் கிழமை முடி வெட்டக்கூடாது ஏன்?

ஆரம்ப காலங்களில் விவசாயிகள் ஒரு வாரம் அயராமல் வேலை பார்த்து விட்டு திங்கட்கிழமை ஓய்வு தினமாக எடுத்துக் கொள்வார்கள். எனவே திங்கள் கிழமையே வீட்டை சுத்தப்படுத்தி, தலை முடியையும் வெட்டு விடுவார்கள்.

அதனால் செவ்வாய்கிழமை முடி வெட்டுபவர்களுக்கு வேலை இல்லாததால், அவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்வார்கள். இதனால் தான் செவ்வாய் கிழமை முடி வெட்டக் கூடாது என்று கூறுவர்கள்.

மாலையில் வீடு கூட்டக் கூடாது ஏன்?

18-ம் நூற்றாண்டுகளில், வீட்டின் வெளிச்சத்திற்காக எண்ணெய் விளக்கு பயன்படுத்தப்பட்டது. அதனால் வீட்டில் வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

அந்த இருட்டில் தரையை பெருக்கினால், வீட்டில் உள்ள தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தொலைந்துவிடும் என்பதற்காக வீட்டில் விளக்கு வைத்தவுடன் வீட்டை கூட்டக் கூடாது என்று கூறுகிறார்கள்.

உப்பு மிளகாய் கைகளில் கொடுக்கக் கூடாது ஏன்?

உப்பு, மிளகாயை நேரடியாக கைகளில் கொடுக்கக் கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் அது வசதிக்காக இப்படியான நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஒருவரின் கைகளில் உப்பு கொடுப்பதற்கு பதிலாக கிண்ணத்தில் கொடுத்தால் அவருக்கு தேவையானதை எடுத்துக் கொள்வார் என்பதற்காக பின்பற்றது.

இறுதிச்சடங்கு நடந்த வீட்டிற்கு சென்று வந்ததும் குளிப்பது ஏன்?

இறுதிச்சடங்குக்கு சென்று விட்டு வந்தவர்கள் குளித்து பின்பு தான் வீட்டிற்க்குள் வர வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் இறந்த உடலில் இருக்கும் எந்த ஒரு தொற்றுக்களும் நம்மை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பழக்கம் பின்பற்றப்பட்டது.

கருப்புபூனை அபசகுனம் என்று கூறுவது ஏன்?

வெளியில் செல்லும் போது கருப்பு பூனை குறுக்கே சென்றால், அது அபசகுனமாக என்று கூறுவார்கள். ஏனெனில் பல இடங்களில் கருப்பு பூனையை சூனியத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் சூனியத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருளை பார்த்தவுடன் அபசகுனம் என்று கூறுகின்றனர்.

உப்பு கொட்டினால் துரதிஷ்டம் ஏன்?

மருத்துவத்தில் பயன்படும் உப்பு மிகவும் விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டது. அதனால் உப்பை கொண்டு செல்லும் போது, கீழே கொட்டிவிட்டால் அது துரதிர்ஷ்டம் என்று கூறினார்கள்.

பாம்பு புற்றுக்கு பால் முட்டை வைப்பது ஏன்?

பாம்பிற்கு பால் மற்றும் முட்டை மிகவும் பிடிக்கும் என்பதால், அதனால் பாம்பு புற்றில் பால் ஊற்றி வேண்டி கொண்டால்ம் நினைத்தது நடக்கும் என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையில் பாம்பு பால், முட்டையை சாப்பிடாது.

மாலையில் பூக்களை பறிக்க கூடாது ஏன்?

மாலை நேரங்களில் பூக்களை பறித்தால், அது வீட்டிற்கு நல்லதல்ல என்று சொல்வார்கள். ஏனெனில் செடிகளில் பூச்சி, பாம்பு போன்றவை இருக்கும். அதனால் இருட்டில் பூக்களை பறிக்கும் போது, அது நம்மை கடித்து விடலாம் என்பதற்காக கூறப்பட்டது.

வீட்டின் கொள்ளைப் புற வழியில் வர வேண்டும் ஏன்?

இறந்தவர்கள் வீட்டிற்கு சென்று வந்ததும் வீட்டின் கொள்ளைப்புறம் வழியாக வர வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் முந்தைய காலத்தில் குளியலறை வீட்டிற்கு வெளியில் உள்ள கொள்ளைப்புறத்தில் இருக்கும். அதனால் குளித்து விட்டு வீட்டிற்குள் வர வேண்டும் என்பதை வலியுறுத்த கூறப்பட்டது.

தும்மலை அபசக் குணமாக கருதுவது ஏன்?

சுப காரியங்கள் அல்லது வெளியில் செல்லும் போது, தும்மினால் அது கெட்ட சகுனம் என்று கூறுவார்கள். ஏனெனில் தும்மினால் அது அவருக்கு உடம்பு சுகமில்லை என்று அர்த்தம். அதனால் தும்மியவருக்கு, உடம்பு சுகமில்லாததால் வெளியில் செல்ல வேண்டாம் என்று கூறுவார்கள்.

புரட்டாசியில் அசைவம் சாப்பிடக் கூடாது ஏன்?

புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் பெருமாளுக்கு விசேஷ மாதம் என்பதாலும், புரட்டாசி மாதத்தில் பருவநிலை மாறுவதால், அது உடல் உஷ்ணத்தை அதிகமாக்கி, உடல்நலக்குறைவை ஏற்படுத்தும் என்பதற்காக கூறப்பட்டது.

இரவில் அரச மரத்தடியில் படுக்க கூடாது ஏன்?

இரவு நேரத்தில் மரத்தடியில் தூங்கினால் பேய் பிடிக்கும் என்று கூறுவார்கள். ஏனெனில் அரசமரம் பகலில் கரியமில வாயுவை எழுத்து கொண்டு, பிராண வாயுவை விடும். ஆனால் இரவில் பிராண வாயுவை எழுத்து கொண்டு, கரியமில வாயுவை வெளியிடும்.

அதனால் மரத்தடியில் இரவில் தூங்குபவர்கள் கரியமில வாயுவை சுவாசித்தால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் போய்விடும் என்பதற்காக இரவில் அரச மரத்தடியில் படுக்கக் கூடாது என்று கூறப்பட்டது.

ஒற்றை எண்ணில் மொய் வைக்க வேண்டும் ஏன்?

விசேஷ வீடுகளுக்கு மொய் வைக்கும் போது, ஒற்றைப்படை எண்ணில் வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் இரட்டைப்படை எண்ணை எளிதில் வகுக்க முடியும்.

அப்படி வகுத்தால் மீதம் பூஜியம் அல்லது சரியான எண் வரும். ஆனால் ஒற்றைப் படை எண்ணை வகுத்தால் பூஜ்யம் வராது என்பதற்காக கூறப்பட்டது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit