சூட்டிங்கில் கயிற்றில் தொங்கியபடி நடித்த போது கீழே விழுந்தார் விசால்!

பிறப்பு : - இறப்பு :

சூட்டிங்கில் கயிற்றில் தொங்கியபடி நடித்த போது கீழே விழுந்தார் விசால்! எந்த இடத்தில் அடி தெரியுமா?

மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தின் சூட்டிங் பிச்சாவரம் சதுப்பு நிலக்காட்டில் நடைபெற்று வருகிறது.

நேற்று விசால் கயிற்றில் தொங்கிக் கொண்டு வருவது போன்ற காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது பிடி நழுவி விசால் கீழே விழுந்தார். இதனால் தளத்தில் கடும் பதற்றம் ஏற்பட்டது.

இதில் விசாலுக்கு தோல்பட்டை, கணுக்காலில் சின்ன காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த விசால், பின்னர் மீண்டும் சண்டை காட்சியில் நடித்தாராம்.

விசாலை பிடிக்க முயன்ற நடிகர் வினயனும் கீழே விழுந்து அவருக்கும் அதே இடத்தில் சின்ன காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit