தனது காதலை கேக் வெட்டி கொண்டாடிய ஓவியா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ovia

தனது காதலை கேக் வெட்டி கொண்டாடிய ஓவியா Oviya Love Celebrations. ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகம்.

பிக்பாஸ் வீட்டில் ஆரவுடன் ஏற்பட்ட காதல் தோல்வி காரணமாக நடிகை ஓவியா சுயவிருப்பத்தின் பேரில் வெளியேறினார்.

கமலிடம் பேசும்போது கூட தான் இன்னும் ஆரவை காதலிப்பதாக கூறினார்.

எனவே கமல் கூட அது உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி விட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஓவியா சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஜாலியாக சென்று வருகிறார்.

அவ்வாறு சென்ற அவரை பார்த்த ரசிகர்கள் ஆனந்த அதிர்ச்சி அடைந்தனர். ஓவியா ஆர்மியினரின் அன்பு மழையில் ஓவியா திக்கு முக்காடி போனார்.

மேலும் ஓவியா ஆர்மியினர் ஓவியாவை பார்த்த சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.

அப்போது ஒரு ரசிகர் ஓவியாவிடம், இன்னும் நீங்கள் ஆரவை காதலிக்கிறீர்களா என கேட்டார்.

அதனை கேட்ட ஓவியா, ஆமாம் நான் இன்னும் ஆரவை காதலிக்கிறேன். அவர் இல்லாமல் நான் இல்லை.

ஆரவ் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று அதிரடியாக கூறினார்.

இப்போதைய நிலையில் ஓவியா சந்தோஷமாக உள்ளார். ஆனால் ஆரவ் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit