பிக்பாஸ் நிகழ்ச்சி தொடரக்கூடாது.! எச்சரிக்கை விடுத்த வேல்முருகன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

bb

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லும் குழந்தை முதல் கல்லூரி செல்லும் பெண்கள் வரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றிய பேச்சுதான் பேசப்படுகிறது. எனவே இந்த நிகழ்ச்சியை தடைசெய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் பிரச்சனை மற்றும் தண்ணீர் பிரச்சனை என்று தமிழகத்தில் பல உள்ளன. இதற்காக தினமும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது ஒரு புறம் இருக்க பிக்பாஸில் இன்று என்ன நடக்கும் என்று ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள் கூட்டம்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது: விஜய் தொலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் தமிழக மக்களின் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது.

இதனை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் நாங்கள் பெண்களை திரட்டி விஜய் டிவிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று கூறியுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit