ஓவியாவின் சம்பளம் இத்தனை கோடியா!

பிறப்பு : - இறப்பு :

களவானி படத்தில் அறிமுகமானவர் ஓவியா. முதல் படத்திலேயே பல பேரின் மனதை களவாடியவர்தான் இந்த ஓவியா.

ஆனால் அதன்பிறகு சரியான கதைகளை தேர்தெடுக்காதால் அவர் நடித்த படங்கள் ஓடவில்லை. இதனால் படவாய்ப்புகள் குறைந்தன.

வருவாய் குறைந்தது. ஒரு கட்டத்தில் தனது மேனேஜருக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் அவரை நீக்கி விட்டு தானே வாய்ப்புகள் தேட தொடங்கினார்.

ஆனாலும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. முடங்கி போய் இருந்தார்.

அந்த நேரத்தில்தான் ஓவியாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.

இதன் மூலம் பல முன்னணி கதாநாயகிகளே வாயை பிளக்கும் அளவுக்கு புகழ் பெற்று விட்டார்.

முன்பு ஒதுக்கி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் தற்போது ஓவியா வீட்டின் முன் கியூவில் நிற்கிறார்கள்.

பட வாய்ப்புகள் கியூ கட்டி நிற்கின்றன. அத்தனை வாய்ப்புகளையும் ஏற்க முடியாது.

ஒரு சில பட வாய்ப்புகளை ஏற்றாலும் சம்பளமாக ஒவ்வொரு படத்திற்கும் தயாரிப்பாளர்கள் பல கோடி தர தயாராக உள்ளனர்.

அப்படி பார்த்தாலேயே வருடத்திற்கு 50 கோடி வரை சம்பாதிக்க முடியும். இதனைத்தான் நேரம் என்பார்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit