நல்லூரில் தொடர்ந்து பத்து நாட்கள் அரங்கேறவிருக்கும் நாடகங்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் நாடகத் திருவிழா இந்தாண்டும் சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இராணுவ நெருக்கடியான காலமான 2013ம் ஆண்டு நல்லூர் முத்திரைச்சந்தியில் மக்களின் பிரச்னைகளைப் பேசிய பத்து நாடக மேடையேற்றங்களுடன் இந்த நாடகத் திருவிழா ஆரம்பமானது. தற்போது ஐந்தாவது நாடகத் திருவிழாவாக இது நடைபெறவுள்ளது.

இந்தாண்டு ஓகஸ்ட் மாதம் 09 திகதி ஆரம்மாகி 18 திகதிவரை தொடர்ச்சியாக பத்து நாட்கள் நாடகத்திருவிழா தினமும் மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. 12 நாடகங்கள் மேடையேறுகின்றன.

புல்வேறு வகைப்பட்ட நாடகங்கள் இந்த நாடகவிழாவில் மேடையேறி நாடகப்பிரியர்களுக்கு விருந்தளிப்பது வழமை. குறிப்பாக இந்த விழாவில் தான் சிறுவர்கள் பார்த்துமகிழ்வதற்கான வாய்ப்பு அதிகளவில் வழங்கப்படுகின்றது. சிறுவர்கள் மகிழ்வாக நாடகத்தில் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படுவதால் இந்த நாடகத்திருவிழாவிற்கு சிறுவர்களும் பெற்றோர்களும் அதிகளவில் கூடுவது வழமை.

சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப்பெற்றிருப்பதால் இந்தாண்டு சிறுவர் நாடகங்கள் அதிகளவில் மேடையேற்றுவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஏழு சிறுவர்களுக்கான நாடகங்கள் மேடையேறவுள்ளன.

ஈழத்தின் சிறந்த நாடகாசிரியர் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ‘கூடிவளையாடு பாப்பா’, ‘பஞ்ச வர்ண நரியார்’, ‘குழந்தைகள் பாவனை செய்யும்’ ஆகிய சிறுவர் நாடகங்களும் தேவநாயகம் தேவானந்தின் ‘மாயச் சங்கு’, ‘ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்பது பேரும்’, ‘பசும் புலியும்’ ஆகிய சிறுவர் நாடகங்களும் ‘பாட்டி’ பொம்மைகள் நாடகமும் மேடையேறவுள்ளன.

இதனைவிட யாழ். நாட்டார் வழக்கியற் கழகத்தின் ‘மயான காண்டம்’ இசை நாடகம், ‘ஏகாந்தம்’ வேமுக நாடகம், ‘இது கூத்தல்ல நிஜம்’ விழிப்புணர்வு நாடகம் போன்ற நாடகங்களோடு பேராசிரியர் நந்தி எழுதிய ‘சிங்கப்பூர் டொக்டர’; என்ற நாடகமும் விசேடஆற்றுகையாக மேடையேறவுள்ளது.

ஈழத்து நாடக வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகின்ற நல்லூர் நாடகத்திருவிழா நல்லூருக்கு அண்மையில் தனக்கான பிரத்தியேகமான மேடையமைப்பில் நாடக வெளியில் மேடையேற்றப்படுகின்றது.

இது பார்ப்பவர்களுக்கு புதியதொரு அனுபவத்தை வழங்கும். கடந்த நான்கு வருடங்களின் வருடாந்தம் நாடக விழாவிற்காகவே புதிய நாடகங்களைத் தயாரித்து தனித்துவமான நாடகத் திருவிழாவாக இந்த நாடகத் திருவிழா நடைபெறுவது குறி;ப்பிடத்தக்கது.

முதலாவது நாளான ஓகஸ்ட் 09ம் திகதி குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘பஞ்சவர்ண நரியார்’ சிறுவர் நாடகமும் தே.தேவானந்தின் ‘பாட்டி’ பொம்மைகள் நாடகமும் மேடையேறவுள்ளன. இதே போன்று இரண்டாம் நாள் குழந்தை ம. சண்மகலிங்கத்தின் ‘கூடிவிளையாடுபாப்பா’ சிறுவர் நாடகமும் பேராசிரியர் நந்தியின் சிங்கப்பூர் டொக்கடர் நாடகமும் நடைபெறவுள்ளன.

இலவசமாக நடைபெறுகின்ற இந்த நாடகத் திருவிழா சிறுவர்களுக்கு மட்டுமல்லாமல் நாடகமும் அரங்கியலும் கற்கின்ற மாணவர்களுக்கும் நாடக ஆர்வலர்களுக்கும் அரிய வாய்பாக அமைகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*