16 வயது மகளை பிணமாக்கிய தந்தை! துடிதுடித்து இறந்த பரிதாபம்!

பிறப்பு : - இறப்பு :

உரி மாவட்டத்திலுள்ள கோட்வாலி பகுதியின் லக்‌ஷ்மி கோவில் அருகே வசித்துவருபவர் தயாசங்கர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அவருடைய மூத்த மகள் தீபாலியை மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கீழேத் தள்ளிவிட்டு தானும் சுட்டுக்கொண்டார்.

இந்தச் சம்பவத்தைப் பார்த்த தீபாலியின் தங்கையையும் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார் தயாசங்கர். அதில் தீபாலியின் தங்கைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அலறல் சப்தம் கேட்டு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தீபாலி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போதே இறந்துவிட்டார்.

தயாவும், அவரது இளைய மகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபாலி ட்யூஷன் எடுத்து சம்பாதித்து வந்ததாகவும், அந்த வருமானத்தில்தான் குடும்பத்தின் செலவுகள் நடந்ததாகவும் அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தீபாலி ட்யூஷன் எடுக்கிறேன் என்று பொய்சொல்லி ஒருவரைக் காதலித்து வந்ததுதான் தயாசங்கரின் இந்தச் செயலுக்குக் காரணம் என்றும் சொல்லப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit