சோத்துக்கு வழியின்றி..! அதில் இறங்கிய..! கவர்ச்சி நடிகையின் சோகக்கதை…!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இவருடைய தந்தை ஆனந்தன், சில பழைய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பணத்தில் புரண்டவர்.

ஆனால் சில காலங்களில் எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்றார்.

இருந்தபோதும் பணம் இருந்த காலத்தில் கூடவே இருந்த கூட்டமில்லை, தனியாக நின்றார்.

கூட இருந்தது பதின்ம வயதிலிருந்த சாந்தியும், குஞ்சும் குளுவானுமாக இருந்த சாந்தியின் தங்கையும் தம்பியும் தான்.

வறுமை கோர தாண்டவமாடியது, அலுவலக வேலைக்குப் போகுமளவிற்கு படிப்புமில்லை, தந்தையால் சம்பாதிக்கும் நிலையுமில்லை.

நடிப்புலகிற்கு வந்தார் சாந்தி, தங்க தாம்பாளத்தில் வரவேற்க யாரும் அங்கே தயாராக இல்லை, கிடைத்ததெல்லாம் கவர்ச்சி நடனங்கள் தான், அன்று ஆட ஆரம்பித்தார்.

தன் தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு இறக்கை முளைக்கும் வரை ஆடினார்.

குலுக்கு நடிகை,தேள்கடி நடிகை என்று சமூகத்திலுருந்து பத்திரிக்கை வரை கடித்த கடிகள் அத்தனையும் தாங்கிக்கொண்டு ஆடினார்.

ஒரு சமயம் அவர் படப்பிடிப்பிற்கு சென்ற போது வர தாமதமானதால் சாந்தியின் தந்தை படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்பு கொண்டு சாந்தி ஏன் இன்னும் வரவில்லை (இப்போது உள்ளது போன்று கைத்தொலைபேசி அப்போது இல்லை) என கேட்டபோது சரியான பதிலில்லை.

தொடர்ந்து இரண்டு மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைத்த பதில் ‘பயப்படுற நீயெல்லாம் எதுக்கு பொண்ணை நடிக்க அனுப்புற’ என்ற ஏச்சு தான் விழுந்ததாம்.

அழுது கொண்டே தொலைபேசியை வைத்துவிட்டாராம், தன் கையாலாகத தனத்தை எண்ணிய அந்த தந்தை அன்று தூங்கியிருப்பார் என நினைக்கின்றீர்?

தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், ஒரு தாயைப்போல தன் தங்கையையும் தம்பியையும் வளர்த்த சாந்தி, என்று அவரின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்தார்.

என்று என்று அவரின் தம்பி சொந்த காலில் நிற்கும் நிலைவந்ததோ அன்றே நிறுத்தினார் ஆடியதை.

இது மாதிரியான கவர்ச்சி நடிகைகள் என்றும் குலுக்கு நடிகைகள் என்றும் நம்மாலும் சமூகத்தாலும் பத்திரிக்கையாலும் அழைக்கப்படும் ஒவ்வொரு நடிகயின் பின்னாலும் ஒரு கதை இருக்கும்.

கையாலாகத தந்தையோ, ஏமாற்றிய காதலனோ, கணவனோ இருந்திருப்பார்கள் அல்லது சகோதர சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலிருப்பார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*