வட கொரியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை எடுத்துள்ள கடுமையான தீர்மானம்!

பிறப்பு : - இறப்பு :

வடகொரியாவின் அணு ஆயுத திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புதிய பொருளாதார தடைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.

வடகொரியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு தடை விதிப்பதுடன், அங்கு மேங்கொள்ளப்படும் முதலீடுகளை மட்டுப்படுத்தவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்படியான கடுமையான பொருளாதார தடை இதற்கு முன்னர் எந்த நாட்டிற்கு எதிராகவும் விதிக்கப்படவில்லை என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹலே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் இரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரிசோதித்திருந்த நிலையில், தற்போது அமெரிக்க நகரங்களை தாக்கக்கூடிய வல்லமையை கொண்டுள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியாவிற் இந்த செயல்பாட்டிற்கு தென் கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா அகிய நாடுகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது.

எப்படியிருப்பினும், வடகொரிய ஏவுகணைகள் அமெரிக்காவை தாக்கும் தன்மையை கொண்டது என்பது சந்தேகத்திற்கு உரிய விடயம் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

வடகொரியாவில் இருந்து சீனாவிற்கு நிலக்கரி மற்றும் பல்வேறு மூலப்பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

ஏற்றுமதி பொருளாதார தடை மூலம், 300 கோடி அமெரிக்க டொலர் வர்த்தகத்தை இழக்க வேண்டிவரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit