சிறு வயதில் பெண்கள் பூப்படைவதற்கான காரணம் தெரியுமா?

பிறப்பு : - இறப்பு :

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்புப் படிக்கும் பெண்குழந்தைகள் கூட திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுகிறார்கள். மிகச் சிறு வயதில் பூப்படைவதற்காக காரணம் என்னவென்று கேட்கும்போது அதற்கு மருத்துவர்கள் சொல்லும் காரணம் அதிர்ச்சியடைய வைக்கிறது.

டாக்டர் வைஷாகி ரஸ்ட்டாகி இதுகுறித்து கூறும்போது, ” மாறிவரும் வாழ்க்கை முறைகளும், உணவுப் பழக்கவழக்கமும்தான் முக்கியக் காரணம் ” என்கிறார். குழந்தைகள் குண்டாக இருக்கவேண்டுமென்று மெனக்கெடுவது. வளர்ச்சி ஊசி போடப்பட்ட இறைச்சி உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வது. அடைத்து வைக்கப்பட்ட பாக்கெட் உணவுகளை உட்கொள்வது.

Dichlobenzene எனும் கெமிக்கல் நிரம்பியுள்ள கழிவறை வாசனைக் கட்டிகள் மற்றும் ஸ்ப்ரேக்களை நுகர்வது. வீட்டுப்பாடம் மற்றும் சுற்றுப்புற சூழலில் ஏற்படும் பிரச்சனைகளால் மன இறுக்கத்திற்கு ஆளாவது.

வயிற்றில் குழந்தை இருக்கும்போது டயட் என்ற பெயரில் தாய்மார்கள் உட்கொள்ளும் பாட்டிலில் அடைக்கப்பட்ட சோயா புரோட்டின் உணவுகள்.
உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் ஃபுளுரைடு உணவுப்பொருட்கள். இவைகள்தான் பெண் குழந்தைகள் சீக்கிரமாக பூப்படைவதற்கான காரணங்கள்.

நொதிக்கவைக்கடாத உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது, முடிந்தவரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுப்பது போன்ற பழக்க வழக்கங்களால் இதை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit