தற்கொலைக்கு தூண்டியது பிக்பாஸ் தானா?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா குறித்தான(Case Filed Against Bigg Boss) உண்மைகள் வெளிவர வேண்டும் என்று வழக்கறிஞர் பாலாஜி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் எதற்கும் பயப்படமால் துணிச்சலுடன் இருந்த நடிகை ஓவியா கடந்த சில தினங்களாவே மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்பட்டு வருகிறார். இதன் விளைவாக நேற்றையை எபிசோடில் ஓவியா திடீரென நீச்சல் குளித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா தற்கொலைக்கு முயன்ற உண்மையான காரணம் வெளிவர வேண்டும் என்று வழக்கறிஞர் பாலாஜி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்கறிஞர் பாலாஜி கூறுகையில், “பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்கள் கேமரா மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. கடந்த 4-ம் தேதி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீச்சல் குளத்தில் நடிகை ஓவியா மூழ்குவதைப்போல காட்சி வெளியானது. அவர், மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்பட்டது. அவரது மனஅழுத்தத்துக்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடிகர் கமல்ஹாசன், விஜய் டிவி நிர்வாகம் ஆகியோர் காரணமாகக் கருதப்படுகின்றனர். எனவே, இந்தச் சம்பவத்தில் காவல்த்துறையினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஆர்.பி. அதிகரிக்க இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால்தான் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*