மனைவியை கொடூரமாக கொன்றது ஏன்? கணவர் வாக்குமூலம்!

பிறப்பு : - இறப்பு :

மனைவி தன்னுடன் வாழ மறுத்ததால் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த புழலை சேர்ந்தவர் தயாநிதி. இவர் மனைவி சத்யபாமா. இவர்களின் மகள் சிந்துஜா (27)

சிந்துஜாவுக்கும் தேவநீதி (31) என்பவருக்கும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைப்பெற்றது.

திருமணத்தின் போது சிந்துஜாவின் பெற்றோர் நகை, பணம், சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் கூடுதல் வரதட்சணையாக பணம் கேட்டு சிந்துஜாவை தேவநீதி கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதில் கோபித்து கொண்டு சிந்துஜா கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தனது தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

தேவநீதியின் உறவினர்கள் அவருடன் சேர்ந்து வாழ அழைத்தும் சிந்துஜா வர மறுத்து விட்டார்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் தயாநிதி தேவநீதி வீட்டுக்கு வந்து திருமணத்தின் போது தாங்கள் கொடுத்த சீர்வரிசை பொருட்களை லொறியில் ஏற்றிக்கொண்டு வந்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த தேவநீதி நேற்று முன் தினம் இரவு சிந்துஜா வீட்டுக்கு சென்று அவருடன் தனியாக பேச வேண்டும் என கூறி கதவை பூட்டியுள்ளார்.

பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழ வரும்படி தேவநீதி கூறினார். அதற்கு சிந்துஜா மறுத்தார்.

இதனால் கோபமடைந்த தேவநீதி சமையல் அறையில் இருந்த கத்தியால் மனைவி சிந்துஜாவின் கழுத்தை அறுத்ததில் சம்பவ இடத்திலேயே சிந்துஜா உயிரிழந்தார்.

அப்போது தேவநீதியின் கையில் கத்தி கிழித்ததால் அவரது கையில் இருந்து ரத்தம் கொட்டியது.

பிறகு சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் சிந்துஜா சடலத்தை கைப்பற்றினார்கள். கையில் ஏற்பட்ட காயத்துக்காக தேவநீதியை பொலிசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கோபித்து சென்ற மனைவியை பல முறை அழைத்தும் அவர் வராததாலும், தனக்கு தரப்பட்ட சீர்வரிசையை திரும்பி எடுத்து சென்றதாலும் ஆத்திரத்தில் சிந்துஜாவை கொலை செய்ததாக தேவநீதி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தொடர்ந்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit