என் மகள் அப்படிபட்டவள் அல்ல: ஓவியாவின் தந்தை பேட்டி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவசரத்தில் ஏதேனும் காதலில் விழுவதும் அதன் பேரில் பச்சைக்குத்திக் கொள்வதும் என் மகளின் சுபாவம் அல்ல என ஓவியாவின் தந்தை நெல்சன் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்துக்கு ஓவியாவின் தந்தை நெல்சன் அளித்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

என் மகள் படித்தது எல்லாம் மலையாள வழிக்கல்வி தான், அவள் இந்த அளவுக்கு தமிழ் பேசுவாள் என நான் எதிர்பார்க்கவில்லை.

தமிழை தாய்மொழி போன்று பேசுகிறாள், மூன்று வயது முதல் சுதந்திரமாக வளர்ந்து வருகிறாள்.

அவளை நான் ஒருபோதும் தண்டித்தது இல்லை, அவளை கண்டிக்க வேண்டிய நிலையும் வந்ததில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓவியாவின் தாய் ஜான்சி புற்றுநோயால் இறந்துபோனார். தற்போது நானும், என் மகள் ஓவியா, என் தாயார் மேரியும் வசித்து வருகிறோம்.

பிக்பாஸ்ன்னு நிகழ்ச்சி இருக்குன்னு என்னிடம் தெரிவித்தாள், அங்கு போய் விட்டால் 100 நாட்களுக்கு போன் செய்யவோ, பார்க்கவோ முடியாது என்று தெரிவித்தாள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கமல்ஹாசன் என்றதுமே ஒப்புக்கொண்டேன்.

ஓவியா நடிக்கவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, அவளுக்கு எப்போதும் ஒரே முகம் தான்.

ஓவியா எப்போதும் தன்னம்பிக்கை உடையவர், ஆரவ்- ஓவியா விடயத்தை கண்டு நான் பயப்படவில்லை.

முன்யோசனையின்றி திடீரென ஆபத்தில் சிக்கிக் கொள்பவரும் இல்லை, எல்லோரும் பலவிதமாக சொல்கிறார்கள், ஆனால் நான் அப்படி கருதவில்லை.

அவசரத்தில் ஏதேனும் காதலில் விழுவதும் அதன் பேரில் பச்சைக்குத்திக் கொள்வதும் என் மகளின் சுபாவம் அல்ல என தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*