பிக்பாஸில் இருந்து வெளியேறினார் நடிகை ஓவியா வெளியானது புகைப்படம்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை ஓவியா வெளியேறியது உறுதியாகியுள்ளது.

எதற்கும் அழுக கூடாது என்று தன்னம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்த ஓவியா கடந்த சில தினங்களாகவே ஆரவ் மீது கொண்ட காதல் தோல்வியடைந்ததன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார்.

தன்னை வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று கூறி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் வீட்டிற்கு வெளியே மழையில் படுத்திருந்த ஓவியா இன்று திடீரென நீச்சல் குளத்தில் குதித்தார், அதன் பின் மற்ற போட்டியாளர்கள் ஓடி வந்து ஓவியாவை குளத்தில் இருந்து தூக்கினர்.

இது பிக்பாஸ் வீட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக காரில் ஓவியா செல்லும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit