தமிழகத்திற்கு புதிய முதலமைச்சர் ஓ.எஸ். மணியனா? அதிர்ச்சியில் எடப்பாடி?

பிறப்பு : - இறப்பு :

ஆட்சி இருந்தும், முதலமைச்சர் (new-cm-tamilnadu) பதவி இருந்தும் நிம்மதி மட்டும் இல்லையாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு.

ஒரு பக்கம் தினகரனின் செல்வாக்கு அதிகரித்து வருவதும், மற்றொரு பக்கம் பன்னீர் அணியினர் இணைய மறுப்பதும் அவரது நிம்மதியின்மைக்கு முக்கிய காரணங்களாம்.

மத்திய அரசு சொல்லும் சின்ன விசயங்களை கூட தவறாமல் கடை பிடித்து வருவதால் ஆதரவாளர்கள் மத்தியில் இருந்தும் எதிர்ப்பு இருக்கிறதாம்.

இந்நிலையில் தினகரன் தரப்பில் இருந்து எடப்பாடியை சந்தித்த டெல்லி அதிமுக தலையை மிரட்டி அனுப்பினாராம் எடப்பாடி.

எனக்கு முதலமைச்சர் பதவி அவசியம் என்றில்லை. ஆட்சியை நீங்கள் கவிழ்த்தால், சசிகலாவின் நிலையை பற்றி யோசித்து பாருங்கள். ஆட்சி இருக்கும் போது உங்களுக்கு இவ்வளவு சிக்கல்கள். அது இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று நினைத்து பாருங்கள் என்றாராம் பழனிச்சாமி என்கிறது ஒரு ஊடகத் தகவல்.

பழனிச் சாமி மோடியின் சொல்பேச்சு கேட்பதால், அவரை இறக்கிவிட்டு ஓ.எஸ் மணியனை முதலமைச்சராக நியமிப்பதோடு, கட்சி அலுவலகத்திற்கு சென்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தீவிர முனைப்பில் இருந்த தினகரன், சசிகலாவை சந்தித்த பின் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

முதலில் ஊர் ஊராக சென்று கட்சித் தொண்டர்களை சந்தித்து அவர்களை நம் பக்கம் கொண்டு வா என சித்தி உத்தரவிட அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளார் டிடிவி என்கிறது அந்த ஊடகத் தகவல்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit