பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ஓவியா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ovia

பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ஓவியா வெளியேறிவிட்டதாக தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்கத்தில் இருந்தே மற்ற போட்டியாளர்கள் நடிகை ஓவியா ஒதுக்கியே வைத்துள்ளனர். நடன இயக்குநர் காயத்ரி மற்றும் சக்தி ஆகியோர் ஓவியாவிடம் மிகவும் மோசமாகவே நடந்து வருகின்றனர்.

ஒருபுறம் காயத்ரி அடிக்கடி கெட்ட வார்த்தையில் திட்டுவதையும், மறுபுறம் தன்னை அடிக்க வந்த சக்தியையும் பயமில்லாமல் எதிர்கொண்ட ஓவியா, கடந்த சில தினங்களாகவே ஆரவ் மீது கொண்ட காதல் காரணமாக அழுது கொண்டே இருக்கிறார். இருவர் இடையேயான காதல் நேற்று ஒரு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே நான் இந்த வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் என்று அடிக்கடி கூறி வரும் ஓவியா அடம்பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இவை உண்மையா? இல்லை எப்பவும் போல் வதந்தி தானா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றாலும் ஒவ்வொரு நாள் எபிசோட் குறித்தும் இரண்டு பிரமோ வீடியோ வெளியிடும் விஜய் டி.வி இன்று ஒரே ஒரு பிரமோ வீடியோ மட்டுமே வெளியிட்டுது இந்த சந்தேகத்திற்கு வலு சேர்த்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit