வெறுத்து போன மனைவியை குஷிப்படுத்த 7 வழிகள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருமணமானவர்கள் தங்களின் துணைவியை சில சமயங்களில் உடல் ரீதியாக துன்புறுத்தினால் அது மறைந்து விடும். ஆனால் மன ரீதியாக ஏற்படுகின்ற தாக்கம் இறக்கும்வரைக்கும் ஆறாத வடுவாக இருந்து வரும்.

அப்படி ஒருவேளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உங்கள் துணையின் மனம் புண்பட்டு போயிருந்தால் அவரை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர வேண்டும்.

அது போன்று இருப்பவர்களை திரும்ப அழைக்க நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் இது மட்டும்தான்

வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம்:

மனைவி புண்பட்டு போன நேரத்தில் எக்காரணத்தை கொண்டும் வெளியூர்களுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் வெளியூர் சென்றபோது அதுவே மேலும் மனக்கசப்பு அதிகமாக நேரிடும்.

கட்டி அணைக்கலாம்:

முடிந்த அளவுக்கு மனைவியிடம் அதிக நேரத்தை செலவழியுங்கள். நெஞ்சோடு அணைத்து கட்டிக்கொள்ளுங்கள். உங்கள் துணைக்கு இதைவிட பெரிய மருந்து எதுவும் இருக்காது.

நிதானம்:

ஒருவரின் மனதை புண்படும்படி நடந்துக் கொள்வது எளிது. ஆனால் அதில் இருந்து அவரை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வருவது கடினமான செயல்.

திடீரென்று கோபத்தில் திட்டிவிடுவார்கள். பிறகு சிரி சிரி என்று சொல்வார்கள். அதுபோன்று செய்வதை முதலில் நிறுத்த வேண்டும்.

சந்தேகப்படக்கூடாது:

முற்றிலும் தவிர்க்க வேண்டியது சந்தேகம். இது அனைவரின் மனதையும் மிக மிக கடுமையாக பாதிக்கப்படுத்தும். எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றக்கூடாது. இதனை மேலும் மேலும் செய்து கொண்டிருந்தால் தாம்பத்திய வாழ்வில் விரிசல் உண்டாக்கிவிடும்.

தயக்கம் கூடாது:

ஆண்கள் திடீரென்று தவறு செய்திருப்பார்கள் ஆனால் மனைவியிடம் மன்னிப்பு கேட்க தயங்குவார்கள். இந்த செயலை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் பழைய சொற்கள்:

மனைவி எந்த காரணத்தால் கோபப்பட்டிருபாரோ அதனை திரும்ப திரும்ப நியாபகபடுத்தி கொண்டே இருக்கக்கூடாது. இது மேலும் விரிசல் அதிகரிக்க ஒரு காரணமாகவே அமையும்.

உண்மையான காதல்:

உண்மையான காதலை வெளிபடுத்துங்கள், மனைவியை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள். உங்களின் காதலை வெட்கப்படாமல் வெளிப்படுத்துங்கள். இந்த ஒரு சொற்களே உங்களின் பாசத்தை அதிகமாக்கி இல்லறம் இனிமையாக அமையும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*