கணவன் வீட்டைவிட்டு கிளம்பியதும், தோழிகளை அழைக்கும் இளம்பெண்கள்! புது டிரெண்ட்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அலுவலகத்திற்கு சென்ற கணவன் எப்போது வீட்டுக்கு வருவார் என்று காத்திருந்தது அந்த காலம். ஆனால் இந்த காலம் எல்லாமே மாறிவிட்டது. திருமணமான பெண்கள் வீட்டில் கணவன் இல்லாத சமயத்தில் தனது இஷ்டப்படி சில காரியங்களை செய்து கொள்கிறார்கள்.

அது போன்று செய்வதால் உங்கள் மீது அக்கறை இல்லை என்று அர்த்தம் கிடையாது. பொதுவாகவே சில ஆண்கள் தங்களின் மனைவி வெளியூர்களுக்கு சென்றுவிட்டால் பொண்டாட்டி வெளியூருக்கு போயிட்டா என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பதை பார்க்கலாம்.

எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போமா:

தோழிகளிடம் கொண்டாடுதல்:

தன்னுடைய பள்ளி தோழிகளை வீட்டுக்கு அழைத்து அவர்களிடம் நிறைய விஷயங்களை பரிமாறிக்கொள்வார்கள். இதனால் அவர்களின் மனஅழுத்தம் பெருமளவு குறைகிறது என்று பெண்கள் தெரிவிக்கின்றனர்.

சமையல் கிடையாது:

தன்னுடைய கணவன் வீட்டிலிருந்தால் சுவையான உணவை சமைத்து போடவேண்டும். அதுவே அவர் வெளியூர்களுக்கு சென்றுள்ளதால் சமைக்க வேண்டி அவசியம் இல்லை. நிதானமாக தனக்கு பிடித்தமான உணவை ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள்.

நல்ல தூக்கம்:

பெண்கள் என்றாலே வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் தாங்களாகவே செய்ய வேண்டும் என்று கட்டாயமாகிறது. இதனால் அவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது.

எனவே கணவன் இல்லாத நேரத்தில் குறட்டை விட்டு எவ்வளவு நேரவேண்டுமானாலும் தூங்கலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

சண்டை போடாமல் தொலைக்காட்சி பார்க்கலாம்:

டிவி பார்ப்பதில் சண்டை இருக்காது. உதாரணத்திற்கு மனைவி சீரியல் பார்த்து கொண்டிருப்பார் அப்போது கணவன் வேறு ஒரு சேனல் வை என்று சண்டையிடுவார்கள். எனவே கணவன் இல்லாத நேரத்தில் அமைதியாக பிடித்த சேனலை பார்த்து மகிழ்வார்கள்.

துணி துவைக்க வேண்டாம்:

அம்மாடியோவ் இவ்வளவு அழுக்கு துணியா என்று சங்கட படுவார்கள், ஆனால் கணவன் இல்லாத நேரத்தில் துணி துவைப்பது பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

ஜாலியான நேரம்:

கணவன் இல்லாத நேரத்தில் ஜன்னல் அருகே அமர்ந்து கையில் டீ டம்ளருடன் பாட்டு கேட்டுக்கொண்டு நேரத்தை ஜாலியாக கழித்து வருவார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*