மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறது: சீமான் குற்றச்சாட்டு

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் நாட்டை தனிமையாகவே மத்திய அரசு பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சுமத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் பேசும் போது இவ்வறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ” கடந்த காலங்களில் சினிமா படம் ஓடினால் நூறுநாள் விழா கொண்டாடுவது வழக்கமாக இருந்தது.

ஆனால், இங்கே எடப்பாடி பழனிச்சாமி நூறு நாள் ஆட்சி என்று போஸ்டர் அடித்து கொண்டாடுகிறார்கள். இந்தியாவிலேயே மேசையை தட்டுவதற்கு ஒரு இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் சம்பளம் நமது மாநிலத்தில் தான் வழங்கப்படுகினறது.

நமது நாடு, இதற்கு வல்லரசு என்று கூறி மார் தட்டுகிறார்கள். இதைவிட சின்ன சின்ன நாடுகள் மக்களுக்கு அனைத்தையும் கொடுக்கிறது. ஆனால், இங்கே அனைத்தும் மக்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது.

மத்திய அரசு தேர்தல் நேரத்தில் அனைவருக்கும் கறுப்பு பணத்தை மீட்டு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால், பண மதிப்பு இழப்பு செய்து நமது மக்களின் பணம் மட்டுமே பறிக்கப்பட்டுள்ளது. வரி வசூல் இந்தியா முழுக்க பெறப்படுகிறது.

ஆனால், நமக்கு ஒரு பாதிப்பு என்றால் நிவாரண தொகைகள் வழங்க முடியவில்லை இந்த மத்திய அரசால். அதே குஜராத் மற்றும் வட மாநிலங்கள் என்றால் கேட்பதற்கு முன்பாக சென்று பார்வையிட்டு உதவிகள் செய்யப்படுகிறது.

ஆனால், தமிழன் செத்தால் எந்தவித உதவியும் கிடையாது. நமது தமிழகத்தை தனிமையாகவே மத்திய அரசு பார்க்கிறது என தெரிவித்துள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*