வீராங்கனைக்கு நேர்ந்த சோகம்!

பிறப்பு : - இறப்பு :

அரியானா மாநிலத்தில் தேசிய ஹாக்கி வீராங்கனை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதி குப்தா(20) என்ற வீராங்கனை தேசிய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு ரேவாரி ரயில் நிலையம் அருகே சென்ற ஜோதி, சண்டிகர்- ஜெய்ப்பூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரவு 10.30 மணி அளவில் ஜோதியின் செல்போனுக்கு அவரது தாய் கால் செய்தார், எடுத்துப் பேசிய பொலிசார் ஜோதி இறந்த தகவலை தெரிவித்தனர்.

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் டூ சான்றிதழ்களில் சில மாற்றம் செய்ய வேண்டியுள்ளது என்று கூறிவிட்டு ரோதக் சென்ற ஜோதி, இப்படி செய்துவிட்டாரே என தாய் கதறி அழுதுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit