தமிழ்நாட்டின் அமைப்பே சரியில்லை அதனால் அணை கட்ட வழியில்லை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அணை கட்ட வழி என்னவென்று கேட்டால் தமிழகத்தின் அமைப்பு சரியில்லை என்ற வாதம் தமிழக அரசிடம் இருந்து வந்திருக்கிறது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகம், கேரள அரசுகளின் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்டிகய அமர்வு முன்பு இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

அப்போது தமிழக அரசின் சார்பில் பல கட்ட விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது தொடர்பான விளக்கங்களை தமிழக அரசிற்கு அளிக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

பின்பு, நதிநீர் பங்கீடு தொடர்பான விவாதம் முன்வந்தது.

அப்போது தமிழக அரசே ஏன் அணை கட்ட முயற்சிக்க கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழகத்தில் அணை கட்டும் அளவிற்கு புவியியல் அமைப்பு இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

கர்நாடகா கட்டும் போது, நீங்கள் ஏன் கட்டக்கூடாது என்று கேட்டதிற்கு அவர்கள் விதியை மதிப்பதில்லை நாங்கள் விதியை முறைப்படி மதிக்கிறோம்.

அதனால் அணை கட்ட முயற்சிக்கவில்லை என்று கூறி இருக்கிறது.

இப்போது புவியியல் அமைப்பு சரியில்லாத தமிழகத்தில் தான் விவசாயமும், உற்பத்தியும் பெருக, காமராஜர் பற்பல அணைகளைக் கட்டினார்.

கரிகாலன் கட்டியதுதான் கல்லணை என்றும், நாங்கள் பிற்காலத்தில் கட்டியதுதான் மேட்டூர் அணை என்றும் பெருமைப் பட்டுக்கொண்டிருந்தோம்.

இதோ கர்மவீரர் காமராஜர் கட்டிய அணைகளையும் பாரும் இந்த அணைக்கட்டுகளால் எத்தனை ஏக்கர்களில் விவசாயம் நடந்தன என்பதையும் சற்று எண்ணிப்பாருங்கள்.

காமராஜர் தனது ஆட்சிக்காலத்தில் சிறிய மற்றும் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் பலவற்றைத் திட்டமிட்டு உருவாக்கினார். இவைகளால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தண்ணீர் வசதி பெற்று விவசாய நிலங்களாக மாறின.

கட்டிய அணைக்கட்டுக்களின் பட்டியல் பாரீர்.

1. கீழ்பவானி

2. மணிமுத்தாறு

3. காவிரி டெல்டா

4. ஆரணியாறு

5. வைகை நீர்த்தேக்கம்

6. அமராவதி (அணை)

7. சாத்தனூர்

8. கிருஷ்ணகிரி

9. புள்ளம்பாடி

10. வீடூர் அணைத்தேக்கம்

11. பரம்பிக்குளம்

12. நெய்யாறு – போன்றவைகளாகும்.

புவியிலமைப்பு சரியில்லாத பூமியில் இது எப்படி சாத்தியமானது. அவர் மட்டும் என்ன வேற்று கிரகத்தில் இருந்து வந்தா கட்டினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*