தரைமட்டம் ஆகப்போவது அமெரிக்காவா? வடகொரியாவா? செப்டம்பரில் போர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vada-korea

அமெரிக்கா – வட கொரியா இடையே பிரச்னை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதிக்கு முன்னர் வட கொரியாவை விட்டு அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வரும் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் வடகொரியாவுக்கு பயணம் செய்யவோ, வட கொரியா வழியாக பயணம் செய்யவோ அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இந்தத் தடையைத் தாண்டியும் அமெரிக்க குடிமகன் யாராவது வட கொரியாவுக்கு பயணம் செய்ய விரும்பினால், சிறப்பு அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்த சிறப்பு அனுமதி, பத்திரிகையாளர்கள், ரெட் க்ராஸில் இருப்பவர்கள் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் வரையறை செய்யப்பட்டுள்ளது. வட கொரியா, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணு ஆயுத ஏவுகணைகளைத் தொடர்ந்து சோதனை செய்துகொண்டிருந்ததை அடுத்து அமெரிக்கா, இனி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்று சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது.

இந்நிலையில், தங்கள் நாட்டு மக்களை வடகொரியாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியிருப்பது போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா மீதான தாக்குதலில் தங்கள் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவுறுத்தல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே வடகொரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என அஞ்சப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit