ஆசிரியைக்கு பிரச்சனை! மாணவிகளை அழைத்து! விவகாரம் விஸ்வரூபம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ch

ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல் பட்டு வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பாரதி மெகர் ஆவார்.

பாரதி மெகர் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும்போது 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்து உடலில் மசாஜ் செய்ய சொன்னார். மாணவிகளும் அதன் படி அவர்கள் ஆசிரியரின் கை,கால் மற்றும் உடலை அமுக்கி விட்டனர். இந்த காட்சியை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த தகவல் மாவட்ட கல்வித்துறை மாவட்ட கல்விதுறை அதிகாரிக்கு தெரியவந்தது.

அதிகாரி நேரடியாக வந்து விசாரணையை நடத்தினார். அந்த வீடியோவில் மாணவிகளை ஆசிரியர் மசாஜ் செய்ய வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது அவரிடம் கேட்டபோது கூறியதாவது. எனக்கு அடிக்கடி தலைவலி வரும். அதுபோல் அன்றும் வந்தது.

எனவே நான் அலுவல அறைக்கு சென்று அமர்ந்தேன். நான் பாடம் நடத்தும் போது 8-ம் வகுப்பு மானவிகள் சிலர் அங்கு வந்து எனது நிலைமையை பார்த்து தானாக மசாஜ் செய்தனர்.

நான் அவர்களை செய்ய சொல்லவில்லை அவர்கள் தான் செய்தார்கள்.தலைவலி என்று துடித்ததால் அவர்களாகவே இப்படி செய்தனர்.

என்னை யாரோ பழிவாங்கும் எண்ணத்தில் இது போன்று செய்துள்ளனர் என்று கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit