ஆபாச மெசேஜ்களை அனுப்பிய பிரபல கிரிக்கெட் வீரர்: பெண் பகிரங்க குற்றச்சாட்டு

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ck

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், தெஹ்ரீக் ஐ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் தனக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்ததாக, கட்சியின் பெண் நிர்வாகி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இம்ரான் கான் தெஹ்ரீக் ஐ இன்சாப் கட்சியின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் அக்கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியான ஆயிஷா குலாலாய் இம்ரான் கான் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அவர் கூறுகையில், இம்ரான் கான் கட்சியில் உள்ள பெண்களை மோசமாக நடத்தி வருவதாகவும், கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அவர் தனக்கு ஆபசமான மெசேஜ்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

தற்போது அவரின் தொல்லை பொறுக்கமுடியாத காரணத்தினாலே கட்சியிலிருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கட்சியின் சார்பில், தேர்தலில் போட்டியிட சீட் தராத காரணத்தினாலே அவர் இது போன்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும், அதுமட்டுமின்றி அவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சியில் சேர முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவும் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit