உருவானது ஆன்டி ஜூலி ஆர்மி..! ஜூலிக்கு எதிராக தீயாய் வேலை செய்யும் ஓவியா ரசிகர்கள்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாசின் இந்த வார நாமினேஷன் பட்டியலிலும் வழக்கம் போல ஓவியாவின் பெயர் வந்து விட்டது. அதே போல ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ஜூலியின் பெயரும் வந்துள்ளது. கூடவே வையாபுரியின் பெயரையும் நாமினேட் செய்து விட்டார்கள்.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டையே தன்னுடைய பொய்யால் ஒரு வாரம் பிரச்னைக்குள்ளாகிய ஜூலியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் ரசிகர்கள்.

வழக்கம் போல ஓவியாவை ரசிகர்கள் காப்பாற்றி விடுவார்கள் என்றே நம்பப்படுகிறது. ஆனால், ஜூலியை வெளியேற்றி விட்டால் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விடும் என்று பிக் பாஸ் குழு இந்த வாரம் வையாபுரியை எலிமினேட் செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.சும்மா விடுவார்களா ஓவியா ஆர்மி. ஓவியாவை ஆதரிக்கும் Oviya Army-‚° Anti Julie Army என்று கூட பெயர் வைக்கலாம். நாமினேட் ஆகட்டும் எப்படி வெளியே அனுப்புகிறோம் என்று பாருங்கள் என்று ஜூலியின் நாமிநேஷனை எதிர்நோக்கி வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், வையாபுரி எலிமினேட் ஆக வாய்ப்பு உள்ளதாக கசிந்த தகவலை தொடர்ந்து தன்னுடைய 50 வாக்குகளையும் ஒவியாவிற்கே போடாமல் 40 ஓவியாவிற்கு 10 வையாபுரிக்கு என பிரித்து வாக்களிக்குமாறு சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

என்ன நடந்தாலும், இறுதியாக வையாபுரியே வெளியேற்றப்பட இருக்கிறார். என்றும் அடித்து கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit