பிக்பாஸ் ரைசா சரளமாக தமிழ் பேசுவது எப்படிதெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

raisa

பிக்பாஸ் வீட்டில் எப்போது பார்த்தாலும் மேக்கப் போட்டு கொண்டே இருப்பவர் ரைசா. இவரின் முழுப்பெயர் ரைசா வில்சன். சொந்த ஊர் பெங்களூரு. ஆனால் படித்தது எல்லாமே ஊட்டியில் உள்ள ஜேஎஸ்எஸ் பள்ளியில்தான். அதனால்தான் இவர் ஓரளவுக்கு சரளமாக பேசுகிறார்.

பின்னர் பெங்களூரில் உள்ள எச்ஐஎன்டி கல்லூரில் பட்டப்படிப்பை முடித்தார். இதனை தொடர்ந்து மாடலிங் துறையில் நுழைந்து பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். பல நிறுவனங்களுக்கு மாடலாகவும் இருந்துள்ளார்.

2011ம் ஆண்டு நடந்த மிஸ் பெமினா அழகி போட்டியில் கலந்து கொண்டார். இறுதி போட்டி வரை சென்று இவர் வெற்றி பெறவில்லை என்றாலும் மிஸ் பியூட்டிபுல் என்ற பட்டத்தை வென்றார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே லட்சியம்.

தனுசின் வேலையில்லா பட்டதாரி 2ம் பாகத்தில் கஜோலின் பி.ஏவாக நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit