நடிகை நஸ்ரியாவின் இன்றைய நிலை – கார் விபத்துக்கு பிறகு?

பிறப்பு : - இறப்பு :

அறிமுக படத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறுவது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே அமையும். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர் நஸ்ரியா. இவர் ஆண்களுக்கு மட்டும் அல்லாமல் பெண்களுக்கும் கனவு கன்னியாக இருந்தார்.

இவர் கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த நேரம் படத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார். தொடர்ந்து அதே ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். அதே வேகத்தில் அடுத்த ஆண்டு 2014ம் ஆண்டு மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். இது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருமணத்தை தொடர்ந்து சினிமாவுக்கு முழுக்கு போட்டு குடும்ப தலைவி ஆனார். தற்போது ஆழப்புழாவில் கணவருடன் வசித்து வருகிறார்.
2017 ஜனவரியில் இவர் தனது ரேஞ்சர் ரோவர் காரில் வெளியில் சென்று போது பின்னால் வந்த மற்றொரு கார் லேசாக உரசியது. இதில் அந்த லேசாக சிராய்ப்பு ஏற்பட்டது. இதனால் அந்த காரை விற்பனை செய்தார்.

இதனை தொடர்ந்து ரூ 30 லட்சம் செலவில் புதிய மெர்சிடஸ் பென்ஸ் காரை வாங்கி அதனை பேஸ்புக்கில் போட்டார். இது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நஸ்ரியா தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றார். நஸ்ரியா கர்ப்பமாக உள்ளார். இதனை பரிசோதிக்கவே மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டது.

இதற்கு நஸ்ரியா பேஸ்புக்கில் ஒரு படத்தை போட்டு என்னை பற்றி பேசுபவர்களுக்கு இப்படித்தான் பதில் அளிப்பேன் என ஒரு போட்டோவை போட்டு பதில் அளித்திருந்தார். இவ்வாறு சினிமாவில் இல்லை என்றாலும் பேஸ்புக்கில் சர்ச்சை பதிவுகளை போட்டு ரசிகர்களின் நேரடி தொடர்பில் உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit